இன்றைய குழந்தைகள் எவ்வளவு புத்திசாலித்தனமாகவும், தங்களது எண்ணங்களை எவ்வளவு தெளிவாக வெளிப்படுத்தவும் தொடங்கிவிட்டார்கள் என்பதற்கு இந்த 3 வயது சிறுவனின் செயல் ஒரு சுவாரஸ்யமான உதாரணமாக மாறியுள்ளது. சாக்லேட் தராததால் கோபமடைந்த சிறுவன், பிரச்சினைக்கு தீர்வு கேட்டு நேராக காவல் நிலையத்திற்கே சென்ற சம்பவம் அங்கிருந்த போலீசாரையே சிரிக்க வைத்துள்ளது.
சிறுவன் காவல் நிலையத்திற்குச் சென்றதும், அங்கிருந்த பெண் போலீசாரிடம் தனது அம்மா மீது புகார் கூறியுள்ளான். சாக்லேட் கேட்டபோது தாய் கொடுக்க மறுத்ததுடன், தன்னை கண்டித்து தட்டியதாகவும் அவன் மழலை மொழியில் தெரிவித்துள்ளார். இதனால் கோபமடைந்த சிறுவன், தனது அம்மாவை கைது செய்து சிறையில் அடைக்க வேண்டும் என்றும் போலீசாரிடம் கேட்டுக் கொண்டான்.
சிறுவனின் புகாரை கேட்ட போலீசார், அவனது பேச்சை கவனமாக கேட்பது போல நடித்து, புகாரை எழுதுவது போன்று காகிதத்தில் பதிவு செய்துள்ளனர். இதனால் சிறுவனும் தனது புகார் ஏற்றுக்கொள்ளப்பட்டதாக நினைத்து அமைதியாகியுள்ளான். இந்த முழு சம்பவமும் வீடியோவாக பதிவு செய்யப்பட்டு சமூக வலைதளங்களில் பகிரப்பட்ட நிலையில், தற்போது வேகமாக வைரலாகி வருகிறது.
சிறுவனின் மழலைப் பேச்சு, கோபம் மற்றும் பிரச்சினையைத் தீர்க்க அவன் தேர்ந்தெடுத்த விதம் என அனைத்தும் இணையவாசிகளை வெகுவாக கவர்ந்துள்ளது. மேலும், சிறுவனின் கோபத்தை பெரிதாக எடுத்துக்கொள்ளாமல், அவனை சமாதானப்படுத்தும் வகையில் போலீசார் புன்னகையுடன் நடந்து கொண்ட விதத்திற்கும் பலரும் பாராட்டு தெரிவித்து வருகின்றனர். 3 வயதிலேயே தனக்கு ஏற்பட்ட பிரச்சினைக்காக காவல் நிலையம் வரை சென்று புகார் அளித்த இந்த சிறுவனின் குறும்புத்தனம் தற்போது இணையத்தில் பேசுபொருளாகியுள்ளது.
Also Read: மனைவி மரணத்தில் மர்மம்..! விடுமுறையில் வீட்டுக்கு வந்த ராணுவ வீரர் செய்த கொடூரம்!



