5 நாட்களில் ரூ.138 கோடி வசூல்.. சூர்யாவின் ‘விஸ்வநாத் & சன்ஸ்’ படத்தின் லேட்டஸ்ட் நிலவரம்!

WhatsApp Image 2026 08 14 at 2.28.10 PM

சூர்யா நடிப்பில் வெளியாகியுள்ள ‘விஸ்வநாத் & சன்ஸ்’ திரைப்படம் பாக்ஸ் ஆபிஸில் தனது பயணத்தை தொடர்ந்து வருகிறது. இந்நிலையில், படம் வெளியான 5 நாட்களில் உலகளவில் குவித்துள்ள வசூல் குறித்த புதிய தகவல் தற்போது வெளியாகியுள்ளது.


அதன்படி, ‘விஸ்வநாத் & சன்ஸ்’ திரைப்படம் 5 நாட்களில் உலக அளவில் ரூ.138 கோடி வசூலை எட்டியுள்ளதாக கூறப்படுகிறது. தொடக்க நாட்களில் படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்தாலும், பின்னர் வசூலில் சற்று மந்தநிலை ஏற்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

வெங்கி அட்லூரி இயக்கியுள்ள இப்படத்தில் சூர்யாவுக்கு ஜோடியாக மமிதா பைஜூ நடித்துள்ளார். பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் வெளியான இந்தப் படத்திற்கு ரசிகர்கள் மற்றும் திரை விமர்சகர்களிடமிருந்து கலவையான கருத்துகள் கிடைத்துள்ளன.

முன்னதாக, இந்த ஆண்டு மே 15ஆம் தேதி வெளியான சூர்யாவின் ‘கருப்பு’ திரைப்படம் மிகப்பெரிய வரவேற்பை பெற்றிருந்தது. அந்தப் படம் நடிகரின் திரைப்பயணத்தில் அதிக வசூல் செய்த படமாக சாதனை படைத்ததாக கூறப்பட்டது. இதனால் அடுத்ததாக வெளியான ‘விஸ்வநாத் & சன்ஸ்’ மீதும் ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பு அதிகமாக இருந்தது.

இதற்கிடையில், சூர்யா அடுத்ததாக மலையாள இயக்குநர் ஜீத்து மாதவன் இயக்கும் படத்தில் நடித்து வருகிறார். இந்தப் படம் டிசம்பர் மாதம் வெளியாகலாம் என தகவல்கள் வெளியாகி வருகின்றன. திட்டமிட்டபடி இந்த ஆண்டுக்குள் அப்படம் திரைக்கு வந்தால், சூர்யாவுக்கு 2026ஆம் ஆண்டு தொடர்ந்து முக்கியமான படங்கள் வெளியான ஆண்டாக அமையும்.

Also Read: தாங்க முடியாத ‘எரிச்சல்’… குளத்திலேயே வாழும் 16 வயது சிறுவன்!. உதவிக்கரம் நீட்டிய ஆனந்த் அம்பானி!.

Saranya

Next Post

சினிமாவில் ஹீரோ.. சொந்த ஊரில் காய்கறி வியாபாரம்! பிரபல நடிகரின் வித்தியாசமான அவதாரம்..

Wed Aug 19 , 2026
சினிமா திரையில் நாயகனாக வலம் வரும் நடிகர் விமல், தனது சொந்த ஊரில் காய்கறி விற்பனை செய்த சம்பவம் தற்போது இணையத்தில் பேசுபொருளாகியுள்ளது. திருச்சி மாவட்டம் பண்ணங்கொம்பில் நடைபெற்ற வாரச் சந்தையில் அவர் காய்கறி கடையில் அமர்ந்து விற்பனை செய்த காட்சிகள் சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகின்றன. விமல் காய்கறிகளை விற்பனை செய்வதுடன், சந்தைக்கு வந்தவர்களை அழைக்கும் வகையில் கூவி பேசியதாகவும் கூறப்படுகிறது. இதனை அங்கிருந்தவர்கள் வீடியோவாகவும் புகைப்படங்களாகவும் […]
aadfac4108977c02bf81e530b7d9177b164e968cfe74446b1eda7eef756e3fa3

You May Like