Nepal Floods | நேபாள நாட்டின் ராசுவா மாவட்டத்தில் போட்டேகோஷி(Bhotekoshi)ஆற்றில் திடீரென வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதில் கட்டிடங்கள், வாகனங்கள், பாலங்கள், சாலைகள் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டன. ஏராளமான மக்களும் வெள்ளத்தில் இழுத்துச் செல்லப்பட்டனர். இதுவரை 17 பேர் இறந்ததாக கூறப்படுகிறது. தொடர்ந்து மீட்பு மற்றும் பாதுகாப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
வெள்ளம் பாதித்த பகுதிகளில் ஹெலிகாப்டர்கள் மூலம் மீட்புப் பணிகள் மேற்கொள்ளப்படுகிறது. நீர்மட்டம் அதிகமாக இருப்பதால் சில பகுதிகளில் ஹெலிகாப்டர்களை தரையிறக்க முடியவில்லை.
இந்நிலையில், கும்பகோணத்தை சேர்ந்த ஏஜென்சி மூலம் நேபாளத்துக்கு ஆன்மிக பயணம் சென்ற தமிழகத்தை சேர்ந்த 57 பேர் ராசுவா மாவட்டத்தின் திமுர் பகுதியில் சிக்கியுள்ளனர். இவர்கள் சென்னை, தஞ்சை, திருவாரூர், மயிலாடுதுறை, திருவண்ணாமலை, கிருஷ்ணகிரி, தருமபுரி உள்ளிட்ட மாவட்டங்களை சேர்ந்தவர்கள்.
கடந்த 23ம் தேதி 3 வேன்கள் மூலம் 57 பேரும் அழைத்துச் செல்லப்பட்டுள்ளனர். ஒரு வேனில் பயணம் செய்த 20 பேர் தப்பித்து கரை ஒதுங்கி உள்ளனர். மீதமுள்ள இரண்டு வேன்களில் பயணம் செய்த 37 பேரின் நிலைமை குறித்து இதுவரை தகவல் வெளியாகவில்லை. மேலும், இந்த வெள்ளத்தில் 400க்கும் மேற்பட்ட இந்தியர்கள் சிக்கியுள்ளனர். நேபாளம் வெள்ளம் தொடர்பான உதவிக்கு 1800 309 3793, 80690 09901 மற்றும் 80690 09900 ஆகிய எண்களில் தொடர்பு கொள்ளலாம் என தமிழக அரசு அறிவித்துள்ளது.
நேபாளத்தை சீரழித்த இந்த பெருவெள்ளம் தற்போது இந்திய எல்லைகளை நோக்கி நகர்ந்து வருவதால், பீகார் மற்றும் உத்தரப்பிரதேச மாநிலங்களில் தீவிர முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் முடுக்கிவிடப்பட்டுள்ளன.
A horrific scene of severe flooding at the Rasuwagadhi border point on the Nepal-Tibet border.
— Ravi Pandey🇮🇳 (@ravipandey2643) August 26, 2026
The strong currents wreaked havoc across the area, leaving 400 pilgrims and 105 Indian tourists also missing in the Nepal floods.#NepalFloods #Nepal #Rasuwa #FlashFlood #Floods pic.twitter.com/dwAX12Gj7l
குறிப்பாக, நேபாளத்தில் பாயும் திரிசூலி நதி இந்திய எல்லைக்குள் நுழையும்போது ‘கண்டக் ஆறு’ என உருவெடுப்பதால், அங்கு ஏற்பட்டுள்ள வெள்ளநீர் அடுத்த 2 முதல் 3 மணி நேரத்திற்குள் பீகார் எல்லையான வால்மீகிநகர் கண்டக் அணைப் பகுதியை வந்தடையும் என அதிகாரிகள் எச்சரித்துள்ளனர். கண்டக் ஆற்றின் நீர்மட்டம் அபாய அளவை தாண்டிப் பெருக்கெடுத்து வருகிறது.
Nepal: A huge and sudden flood entered the Bhote Koshi River from the Chinese side , causing major damage in parts of Rasuwa and prompting authorities to issue high-alert warnings downstream as far as Muglin. 1000 feared drown in the flood #nepal #nepalflood pic.twitter.com/FVtO78Xale
— Preeti Sompura (@sompura_preeti) August 26, 2026
இதனையடுத்து, கண்டக் மற்றும் கோசி ஆற்றோர மாவட்டங்களில் வசிக்கும் மக்களை உடனடியாக பாதுகாப்பான முகாம்களுக்கு மாற்றும் பணியில் பீகார் பேரிடர் மேலாண்மைத் துறை முழுவீச்சில் இறங்கியுள்ளது. கரையோர மாவட்டங்களில் தேசிய பேரிடர் மீட்புப் படை (NDRF) மற்றும் மாநில பேரிடர் மீட்புப் படை (SDRF) குழுக்கள் முழு தயார் நிலையில் களமிறக்கப்பட்டு, நிலைமை தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வருகிறது.
#WATCH | Nepal: Visuals from the flood-affected Nuwakot district in Nepal.
— ANI (@ANI) August 26, 2026
The swollen Bhotekoshi River tore through Nuwakot, leading to homes being swept away, families being separated, and many people still missing. pic.twitter.com/oQ2MJpnxsP



