வேலை விளம்பரத்தை நம்பி சென்ற பெண்.. பாலியல் தொழிலில் தள்ளிய கும்பல்! தப்பித்த பெண் சொன்ன அதிர்ச்சி தகவல்!

woman crying

ஒரு வீட்டிலிருந்து அதிகாலையில் ஜன்னல் வழியாக தப்பி வெளியேறிய பெண்ணின் தகவல், அமெரிக்காவின் புளோரிடாவில் நடந்ததாக கூறப்படும் பாலியல் சுரண்டல் சம்பவத்தை வெளிச்சத்துக்கு கொண்டு வந்துள்ளது. வீட்டு பராமரிப்பு வேலைக்காக வந்ததாக நினைத்த அந்த பெண், தனது கடவுச்சீட்டு பறிக்கப்பட்டு, வேறு ஒரு பணிக்கு கட்டாயப்படுத்தப்பட்டதாக போலீசாரிடம் தெரிவித்துள்ளார்.


தப்பிய பெண் அளித்த தகவலின் அடிப்படையில் சம்பந்தப்பட்ட வீட்டை அதிகாரிகள் நீண்ட நாட்களாக கண்காணித்துள்ளனர். அந்த வீட்டிற்கு ஆண்கள் தொடர்ந்து வந்து, சிறிது நேரத்தில் வெளியேறுவதை போலீசார் கவனித்துள்ளனர். இதையடுத்து அங்கு நடைபெறும் நடவடிக்கைகள் குறித்து விசாரணை தீவிரப்படுத்தப்பட்டது.

விசாரணையின்போது, அந்த பெண் கலிபோர்னியாவைச் சேர்ந்தவர் என்பதும், புளோரிடாவில் வேலை செய்வதற்காகவே அங்கு சென்றிருந்ததும் தெரியவந்துள்ளது. மணிக்கு 35 டாலர் சம்பளம், தங்குமிடம் மற்றும் போக்குவரத்து வசதி வழங்கப்படும் என வெளியான வீட்டு பராமரிப்பு வேலை விளம்பரத்தை நம்பியே அவர் விண்ணப்பித்துள்ளார்.

வேலை கிடைத்ததாக தெரிவிக்கப்பட்ட பின்னர், அவருக்கான விமானப் பயணத்தையும் சம்பந்தப்பட்டவர்கள் ஏற்பாடு செய்துள்ளனர். புளோரிடா சென்றடைந்த அவரை லேக் வொர்த் பீச் பகுதியில் உள்ள ஒரு வீட்டிற்கு அழைத்துச் சென்றுள்ளனர்.

ஆனால், வீட்டிற்குள் சென்ற பின்னர் நிலைமை முற்றிலும் மாறியுள்ளது. அங்கிருந்த மூன்று பெண்கள் அவரது கடவுச்சீட்டை வாங்கிக்கொண்டதுடன், வீட்டு பராமரிப்பு பணிக்காக அவர் வரவழைக்கப்படவில்லை என தெரிவித்துள்ளனர். வாடிக்கையாளர்களுடன் பாலியல் உறவில் ஈடுபட வேண்டும் என்று அவரை கட்டாயப்படுத்தியதாக அந்த பெண் விசாரணையில் தெரிவித்துள்ளார்.

அங்கிருந்து வெளியேறுவதற்கான வாய்ப்பும் அவருக்கு வழங்கப்படவில்லை. வீட்டின் கதவுகள் வெளியே இருந்து சங்கிலி மற்றும் பாதுகாப்பு பூட்டுகளால் மூடப்பட்டிருந்ததாகவும், படுக்கையறை ஜன்னல்கள் ஒட்டுப்பலகைகளால் அடைக்கப்பட்டிருந்ததாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

அந்த வீட்டில் இருந்த காலத்தில் பல ஆண்களை சந்திக்க கட்டாயப்படுத்தப்பட்டதாகவும், சிலர் தன்னை வன்முறையாக நடத்தியதாகவும் அவர் கூறியுள்ளார். குறிப்பாக சிலர் பாதுகாப்பு சாதனங்களை பயன்படுத்த மறுத்ததுடன், தன்னை துன்புறுத்தி கழுத்தை நெரித்ததாகவும் போலீசாரிடம் தெரிவித்துள்ளார்.

தன்னை விடுவிக்குமாறு கேட்டபோது, மிரட்டல்கள் விடுக்கப்பட்டதாகவும், அமெரிக்காவில் இருந்து நாடு கடத்திவிடுவதாக எச்சரித்ததாகவும் அந்த பெண் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், ஒருநாள் அதிகாலை நேரத்தில் வீட்டில் இருந்த விளக்கை பயன்படுத்தி ஜன்னலின் மீது பொருத்தப்பட்டிருந்த தடுப்பை உடைத்துள்ளார். பின்னர் அந்த வழியாக வெளியேறி அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளார்.

மேலும், அந்த வீட்டில் சுமார் 15 வயது சிறுமி ஒருவர் இருப்பதாகவும் அந்த பெண் போலீசாரிடம் தெரிவித்ததால், அதிகாரிகளின் கவனம் மேலும் தீவிரமடைந்தது.

இதையடுத்து புலனாய்வாளர்கள் அந்த வீட்டை தொடர்ந்து கண்காணித்தபோது, ஆண்கள் அடிக்கடி அங்கு வந்து செல்வது தெரியவந்தது. அவர்கள் உள்ளே சென்று சிறிது நேரத்திலேயே வெளியேறியதும் போலீசாரின் சந்தேகத்தை வலுப்படுத்தியது.

பெண் அளித்த வாக்குமூலம், கண்காணிப்பில் கிடைத்த தகவல்கள் மற்றும் சேகரிக்கப்பட்ட ஆதாரங்களின் அடிப்படையில் சம்பந்தப்பட்ட நபர்கள் மீது போலீசார் கைது நடவடிக்கை மேற்கொண்டனர். வேலை வாய்ப்பு என்ற பெயரில் அழைத்துச் சென்று பெண்ணை பாலியல் சுரண்டலுக்கு உட்படுத்தியதாக எழுந்துள்ள இந்த வழக்கில், மேலும் யாரேனும் பாதிக்கப்பட்டுள்ளார்களா என்பது குறித்தும் விசாரணை நடைபெற்று வருகிறது.

Also Read: ரேஷன் கடைகளில் குறைந்த விலையில் வெங்காயம்.. ரூ.30 முதல் விற்பனை செய்ய தமிழக அரசு திட்டம்!

Saranya

You May Like