தனி விமானம் முதல் ரூ.1,900 கோடியில் பங்களா வரை!. கோடீஸ்வர மெஸ்ஸியின் ஆடம்பர உலகம்!

messi net worth

ஆர்ஜென்டினா அணிக்கான தனது சர்வதேச கால்பந்து பயணத்திலிருந்து லியோனல் மெஸ்ஸி நேற்று (ஆகஸ்ட் 31, 2026) அதிகாரப்பூர்வமாக ஓய்வு அறிவித்தார். உலகக் கோப்பை இறுதிப்போட்டியின் தோல்வி மற்றும் தந்தையின் மறைவை தொடர்ந்து இந்த முடிவை எடுத்திருந்தாலும், அவர் தொடர்ந்து இன்டர் மியாமி கிளப் அணிக்காக விளையாடி வருகிறார்.


ஃபோர்ப்ஸ் மதிப்பீட்டின்படி, 2026-இல் மெஸ்ஸியின் மொத்த சொத்து மதிப்பு $1.1 பில்லியன் (சுமார் ரூ.9,100 கோடி) ஆகும். கால்பந்து வாழ்க்கை மற்றும் வர்த்தக ஒப்பந்தங்கள் மூலம் வரிக்கு முன் இதுவரை $1.8 பில்லியன் (சுமார் ரூ.15,000 கோடி) சம்பாதித்துள்ளார்.

பார்சிலோனா மற்றும் பிஎஸ்ஜி (PSG) அணிகளைத் தொடர்ந்து, தற்போது இன்டர் மியாமி அணியில் விளையாடி வரும் மெஸ்ஸியின் ஆண்டு வருமானம் $70 மில்லியன் முதல் $80 மில்லியன் வரை (ரூ. 580 – 660 கோடி) உள்ளது. ஓய்வுக்குப் பிறகு இன்டர் மியாமி அணியின் பங்குகளை வாங்கும் உரிமையும் அவருக்கு அளிக்கப்பட்டுள்ளது.

அடிடாஸ் (Adidas) நிறுவனத்துடனான வாழ்நாள் ஒப்பந்தம் மூலம் ஆண்டிற்கு $25 மில்லியன் (ரூ. 212.5 கோடி ஆகும்) பெறுகிறார். மேலும் பெப்சி, கேடரேட், மாஸ்டர்கார்டு உள்ளிட்ட நிறுவனங்கள் மூலம் விளம்பர வருவாயாக மட்டும் $600 மில்லியனுக்கும் (ரூ.5,100 கோடி ஆகும்)மேல் ஈட்டியுள்ளார். இன்ஸ்டாகிராமில் ஒரு விளம்பரப் பதிவிற்குச் சுமார் $2.7 மில்லியன் (ரூ.22.95 கோடி ஆகும்) வரை பெறுகிறார்.

பார்சிலோனா, மியாமி மற்றும் ரோசாரியோ நகரங்களில் $200 மில்லியனுக்கும் அதிகமான மதிப்புடைய சொகுசு பங்களாக்கள் உள்ளன. ‘MiM Hotels’ என்ற சொகுசு உணவக சங்கிலி பிராண்டிலும் முதலீடு செய்துள்ளார்.

சொந்தமாகத் தனி விமானம் வைத்திருக்கும் மெஸ்ஸி, மெர்சிடிஸ்-பென்ஸ், மாஸராட்டி, ரேஞ்ச் ரோவர் மற்றும் ஆடி போன்ற முன்னணி சொகுசு கார்களையும் வைத்துள்ளார்.

1newsnationuser5

Next Post

குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை! வீட்டில் அடிக்கடி செய்து சாப்பிட வேண்டிய சத்தான உணவுகள்..

Tue Sep 1 , 2026
குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் தினசரி உணவில் போதுமான ஊட்டச்சத்துகள் கிடைப்பது அவசியம். ஒரே வகையான உணவை தொடர்ந்து சாப்பிடுவதற்குப் பதிலாக, காய்கறிகள், பழங்கள், பருப்பு வகைகள், முழுதானியங்கள், புரதம் நிறைந்த உணவுகள் உள்ளிட்டவற்றை உணவில் சேர்ப்பது சமச்சீர் உணவுப் பழக்கத்திற்கு உதவும். முருங்கைக்கீரை, சிறுகீரை, அரைக்கீரை, பாலக்கீரை போன்ற கீரை வகைகளை அடிக்கடி உணவில் சேர்த்துக்கொள்ளலாம். இவற்றில் நார்ச்சத்து, வைட்டமின்கள் மற்றும் பல்வேறு தாதுக்கள் உள்ளன. கீரையை […]
healthy food 1

You May Like