’80ஸ் ரெட்ரோ’ டிரெண்டில் இணைந்த லெஜண்ட் சரவணன்..! வைரலாகும் புகைப்படங்கள்..!

legent saravana

சமூக வலைதளங்களில் தற்போது 1980களின் ரெட்ரோ தோற்றத்தை அடிப்படையாகக் கொண்ட AI புகைப்பட டிரெண்ட் வேகமாக வைரலாகி வருகிறது. பழைய கால உடைகள், ஹேர் ஸ்டைல் மற்றும் விண்டேஜ் புகைப்படங்களின் தோற்றத்தைப் பிரதிபலிக்கும் வகையில் பலரும் தங்களது புகைப்படங்களை மாற்றி சமூக வலைதளங்களில் பகிர்ந்து வருகின்றனர்.


இந்த டிரெண்டில் சினிமா பிரபலங்கள் உள்ளிட்ட பலரும் ஆர்வத்துடன் இணைந்து வருகின்றனர். அந்த வகையில் நடிகர் லெஜண்ட் சரவணனும் தற்போது 80ஸ் ரெட்ரோ போட்டோ டிரெண்டில் இணைந்துள்ளார். லெஜண்ட் சரவணன் தனது சமூக வலைதள பக்கத்தில் ரெட்ரோ தோற்றத்தில் இருக்கும் புகைப்படங்களை பகிர்ந்துள்ளார். 1980களின் காலகட்டத்தை நினைவூட்டும் வகையில் இந்த புகைப்படங்கள் அமைந்துள்ளதால், அவை ரசிகர்கள் மற்றும் இணையவாசிகளின் கவனத்தை ஈர்த்து வருகின்றன.

தற்போது சமூக வலைதளங்களில் 80ஸ் ரெட்ரோ புகைப்பட டிரெண்ட் தொடர்ந்து பிரபலமடைந்து வரும் நிலையில், லெஜண்ட் சரவணனின் இந்த புகைப்படங்களும் இணையத்தில் வைரலாகி வருகின்றது.

Also Read:ஆந்திர கிராமங்களில் அதிர்ச்சி..! கிணறு, குழாய்களில் கொதிக்கும் வெந்நீர்..! குடிநீருக்காக மக்கள் அவதி..!

maha

Next Post

மிளகாய் பொடி வீசி வங்கியில் கைவரிசை காட்டிய கொள்ளையன்!. 30 நிமிடத்தில் மடக்கி பிடித்த போலீஸ்!

Sat Sep 12 , 2026
மகாராஷ்டிர மாநிலம் நாக்பூரில் உள்ள ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியா கிளையில் முகமூடி அணிந்த நபர் ஒருவர் மிளகாய் பொடியை வீசி ரூ.4.53 லட்சம் பணத்தைக் கொள்ளையடித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சக்கர்தாரா காவல் நிலையப் பகுதியில் அமைந்துள்ள இந்த வங்கியில் நிகழ்ந்த இந்த கொள்ளை சம்பவம் தொடர்பான சிசிடிவி காட்சிகள் தற்போது வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளன. வங்கிச் செயல்பாட்டு நேரம் முடிந்த பிறகு கடந்த வியாழக்கிழமை மாலை […]
nagpur bank theft 30kb

You May Like