இமயமலைப் பகுதியில் ஏற்படும் ஒரு சிறிய அளவிலான உயர்மலை பேரிடர்கூட அடுத்தடுத்து பல்வேறு பாதிப்புகளை உருவாக்கி, கீழ் பகுதியில் மிகப்பெரிய பேரழிவாக மாறும் அபாயம் உள்ளது. பனிச்சரிவு, நிலச்சரிவு அல்லது பனிப்பாறை உடைதல் போன்ற ஒரு நிகழ்வு ஆறுகளின் போக்கைத் தடுத்து, திடீர் வெள்ளம் மற்றும் சேற்றுப்பெருக்கை ஏற்படுத்தும் சூழல் உருவாகலாம். நேபாளத்தில் சமீபத்தில் ஏற்பட்ட பேரிடர், இத்தகைய தொடர்ச்சியான பேரிடர் சங்கிலியின் ஆபத்தை வெளிப்படுத்தியுள்ளது.
இந்திய புவியியல் ஆய்வு மையத்தின் (GSI) கொள்கை ஆதரவு அமைப்பின் கூடுதல் தலைமை இயக்குநர் பிரதீப் சிங், இமயமலைப் பேரிடர்களை ஒவ்வொன்றாக தனித்தனியாக மதிப்பிடாமல், அவை ஒன்றுடன் ஒன்று ஏற்படுத்தும் தாக்கத்தையும் சேர்த்து ஆய்வு செய்ய வேண்டும் என வலியுறுத்தியுள்ளார். செயற்கைக்கோள் கண்காணிப்பு, கள ஆய்வு மற்றும் தரைநிலை கருவிகளின் தகவல்களை ஒருங்கிணைப்பது அவசியம் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
நேபாளத்தில் ஆகஸ்ட் 26-ம் தேதி நேபாள-திபெத் எல்லைப் பகுதியில் ஏற்பட்ட திடீர் வெள்ளம் வடக்கு மற்றும் மத்திய பகுதிகளில் உள்ள பல நகரங்கள் மற்றும் கிராமங்களை கடுமையாக பாதித்தது. போடேகோஷி ஆற்றில் பெருக்கெடுத்த வெள்ளம் குடியிருப்புகள், சாலைகள் மற்றும் பால்களை அடித்துச் சென்றதுடன், 1,300-க்கும் மேற்பட்ட உயிரிழப்புகளுக்கும் வழிவகுத்தது.
லாங்டாங் லிருங் பகுதியில் ஏற்பட்ட பனிப்பாறை-பாறை சரிவு தொடர்பாக மேற்கொள்ளப்பட்ட செயற்கைக்கோள் ஆய்வில், ஆற்றின் அருகே தற்காலிகமாக நீர் தேங்கிய பகுதி அடையாளம் காணப்பட்டது. ஆகஸ்ட் 28-ம் தேதி எடுக்கப்பட்ட செயற்கைக்கோள் படத்தில் சுமார் 11 ஹெக்டேர் பரப்பளவில் நீர் தேங்கியிருந்தது தெரியவந்தது. இதன் மூலம் பனிப்பாறை மற்றும் பாறைகள் சரிந்ததைத் தொடர்ந்து ஆற்றின் இயல்பான ஓட்டம் தடைப்பட்டு, தற்காலிக நீர்த்தேக்கம் உருவானிருக்கலாம் என ஆய்வுகள் சுட்டிக்காட்டுகின்றன.
உயரமான மலைப்பகுதியில் ஏற்படும் ஒரு நிலைத்தன்மை இழப்பு, பனிச்சரிவு, நிலச்சரிவு அல்லது பனிப்பாறை உடைதல், ஆற்றின் பாதை அடைப்பு, அணை உடைதல் போன்ற திடீர் நீர் வெளியேற்றம், சேற்றுப்பெருக்கு மற்றும் கீழ்நிலை வெள்ளம் என அடுத்தடுத்த நிகழ்வுகளை உருவாக்க முடியும். இவை ஒன்றுடன் ஒன்று இணைந்து பாதிப்பை மேலும் அதிகரிக்கும் என்பதால், ஆபத்து ஏற்படுவதற்கு முன்பே அதிக அபாயம் உள்ள மலைப்பகுதிகளை அடையாளம் காண வேண்டும்.
குறிப்பாக வேகமாக மாற்றமடையும் பனிப்பாறை விளிம்புகள், பனிப்பாறை-பாறை அமைப்புகள், நிலையற்ற பனிப்பாறை ஏரிகள் மற்றும் அவற்றை தாங்கி நிற்கும் மொரைன் பகுதிகள், வெடிப்புகளுடன் கூடிய செங்குத்தான பாறை சரிவுகள் ஆகியவற்றில் தொடர் கண்காணிப்பு அவசியமாகிறது. செயற்கைக்கோள் படங்களில் தொடர்ந்து அல்லது வேகமாக அதிகரிக்கும் நிலப்பரப்பு மாற்றங்கள் காணப்படும் பகுதிகளுக்கும் முன்னுரிமை அளிக்க வேண்டும்.
பனிப்பாறைகள் உருகுவதால் தாழ்வான பகுதிகளில் அல்லது பனிப்பாறைகளின் அருகே நீர் தேங்கி உருவாகும் ஏரிகளே பனிப்பாறை ஏரிகள். அதிகப்படியான நீர் தேக்கம் அல்லது நிலநடுக்கம் உள்ளிட்ட காரணங்களால் இத்தகைய ஏரிகள் திடீரென உடைந்தால், மிகப்பெரிய அளவில் நீர் கீழ்நோக்கி பாய்ந்து பேரழிவை ஏற்படுத்தும். 2023-ம் ஆண்டு அக்டோபரில் சிக்கிமில் ஏற்பட்ட பனிப்பாறை ஏரி வெடிப்பு வெள்ளத்தில் குறைந்தது 60 பேர் உயிரிழந்ததுடன், 4 மாவட்டங்களில் பெரும் சேதம் ஏற்பட்டது.
செயற்கைக்கோள் கண்காணிப்பு மூலம் மலைச்சரிவுகளில் ஏற்படும் மாற்றங்களை முன்கூட்டியே கண்டறிய முடியும். ஆனால், ஒரு பகுதியில் நிலச்சரிவு வேகம் அதிகரிப்பது அந்த சரிவு ஆபத்தான நிலையில் இருப்பதைக் காட்டுமே தவிர, சரிவு எப்போது ஏற்படும் என்பதை துல்லியமாக கணிக்க முடியாது. எனவே, செயற்கைக்கோள் தரவுகளை மட்டும் நம்பாமல், கள ஆய்வு மற்றும் தரைநிலை கண்காணிப்பு கருவிகளின் தரவுகளையும் இணைக்க வேண்டும்.
பல காலகட்டங்களில் எடுக்கப்பட்ட InSAR செயற்கைக்கோள் தரவு, நிலப்பரப்பு மாற்றங்களை கண்காணிக்கும் optical feature tracking, DEM ஒப்பீட்டு ஆய்வு, கள ஆய்வு மற்றும் தரைநிலை கருவிகளின் தகவல்களை ஒருங்கிணைப்பது சிறந்த அணுகும
Also Read: மூளைச்சாவு அடைந்த ராணுவ வீரரின் உடல் உறுப்புகள் தானம்! 7 பேருக்கு கிடைத்த மறுவாழ்வு…



