வீட்டில் தனியாக இருந்த பெண் கொடூரமாக கொலை.. கடைசியாக வந்த நபர் யார்? போலீசாரை அதிரவைத்த சம்பவம்!

b256c4afcd251bfd4df5de068c2c3c36495ff9eb2cad951c36753287550377eb

திண்டுக்கல்லில் பிரிந்து வாழ்ந்த மனைவி கொலை செய்யப்பட்ட வழக்கில் அவரது கணவரை போலீசார் கைது செய்துள்ளனர். சிசிடிவி காட்சிகள் மற்றும் செல்போன் டவர் தகவல்களை வைத்து நடத்திய விசாரணையில் கணவர் சிக்கியுள்ளார்.


திண்டுக்கல் மாவட்டம் பாலகிருஷ்ணாபுரத்தைச் சேர்ந்தவர் ஜெயசீலன். நிலக்கோட்டையில் சர்வேயராக பணியாற்றி வரும் இவருக்கும், மனைவி காளீஸ்வரிக்கும் இடையே குடும்பப் பிரச்சினை இருந்து வந்துள்ளது. இதனால் இருவரும் தனித்தனியாக வசித்து வந்தனர். காளீஸ்வரி தனது இரண்டு பெண் குழந்தைகளுடன் பாப்புலர் நகர் பகுதியில் வசித்து வந்தார்.

கடந்த 11-ம் தேதி மாலை காளீஸ்வரி வீட்டில் கழுத்தறுக்கப்பட்ட நிலையில் சடலமாக கிடந்தார். இதைப் பார்த்து அதிர்ச்சியடைந்த அக்கம் பக்கத்தினர் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். திண்டுக்கல் தாலுகா போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று விசாரணையை தொடங்கினர்.

காளீஸ்வரி வசித்த வீட்டின் அருகே இருந்த சிசிடிவி கேமரா காட்சிகளை போலீசார் ஆய்வு செய்தனர். அதில், சம்பவம் நடந்த நேரத்தில் ஜெயசீலன் வீட்டுக்கு வந்து சென்றது தெரியவந்தது. இதையடுத்து அவரை பிடிக்க போலீசார் தேடுதல் பணியை தீவிரப்படுத்தினர்.

ஜெயசீலனின் செல்போன் எண்ணை வைத்து போலீசார் விசாரணை நடத்தியதில், அவரது செல்போன் திண்டுக்கல்-திருச்சி சாலையில் உள்ள அய்யலூர் பகுதியில் கடைசியாக செயல்பட்டது தெரியவந்தது. பின்னர் செல்போன் அணைக்கப்பட்டிருந்தது.

இதையடுத்து சைபர் கிரைம் போலீசாரின் உதவியுடன் செல்போன் டவர் தகவல்களை வைத்து தனிப்படை போலீசார் தேடினர். இதில் பாலகிருஷ்ணாபுரம் பாப்புலர் நகர் பகுதியில் இருந்த ஜெயசீலனை போலீசார் கைது செய்தனர்.

கைது செய்யப்பட்ட அவரிடம் காளீஸ்வரியை கொலை செய்ததற்கான காரணம் குறித்து விசாரணை நடத்தப்பட்டது. பின்னர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட ஜெயசீலன் சிறையில் அடைக்கப்பட்டார். கணவன், மனைவி இடையே ஏற்பட்ட குடும்பத் தகராறு கொலைக்கு காரணமா என்பது உள்ளிட்ட பல்வேறு கோணங்களில் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Also Read: இந்தியாவை குறிவைக்கும் அமெரிக்காவின் புதிய வரி அஸ்திரம்? பின்னணி என்ன?

Saranya

Next Post

ஃபேர்னஸ் கிரீம் வாங்கும் முன் கவனம்! இந்த 2 கிரீம்களை பயன்படுத்த வேண்டாம்.. முக்கிய எச்சரிக்கை!

Wed Sep 16 , 2026
இந்தியாவில் விற்பனை செய்யப்பட்டு வரும் இரண்டு அழகு கிரீம்கள் தொடர்பாக மத்திய மருந்துகள் தரக் கட்டுப்பாட்டு அமைப்பு (CDSCO) பொதுமக்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது. இந்த கிரீம்களில் அனுமதிக்கப்பட்ட அளவை விட அதிகமான கன உலோகங்கள் இருப்பது கண்டறியப்பட்டுள்ளதால், அவற்றை வாங்கவோ பயன்படுத்தவோ வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. CDSCO வெளியிட்ட எச்சரிக்கையில் Chandni Whitening Cream மற்றும் Goree Beauty Cream ஆகிய இரண்டு கிரீம்களின் பெயர்கள் இடம்பெற்றுள்ளன. பாகிஸ்தானில் தயாரிக்கப்பட்டதாக […]
867f20286c2a082bba7cbaa7b10cfaf5f2f5ba460e3c8855433324b04f6e7c52

You May Like