மருத்துவர்களே இல்லாத நிலை!. அடுத்த 10 ஆண்டுகளில் காத்திருக்கும் பேராபத்து!. WHO வார்னிங்!. பேரதிர்ச்சியில் உலக நாடுகள்!.

doctors

அடுத்த பத்து ஆண்டுகளுக்குள் அடிப்படை சுகாதார தேவைகளைப் பூர்த்தி செய்யக்கூட போதிய மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள் இல்லாமல் பல நாடுகள் திண்டாடும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக உலக சுகாதார அமைப்பு எச்சரித்துள்ளது. மருத்துவத் துறையில் பணிபுரிபவர்களின் வயது கூடிக்கொண்டே செல்வதுதான் இந்த உலகளாவிய நெருக்கடிக்கு முதன்மையான காரணம் என்று தெரிவித்துள்ளது.


அதிர்ச்சியளிக்கும் புள்ளிவிவரங்கள்: உலக சுகாதார அமைப்பு வெளியிட்டுள்ள ‘தேசிய சுகாதார பணியாளர்கள் கணக்கு – 2026’ அறிக்கைப்படி, உலகளவில் 122 நாடுகளில் சேகரிக்கப்பட்ட தரவுகளின் அடிப்படையில் சுமார் 25 சதவீத மருத்துவர்கள் (4-ல் ஒருவர்) 55 வயது அல்லது அதற்கு மேற்பட்ட வயதுடையவர்களாக உள்ளனர். இவர்கள் அனைவரும் அடுத்த 10 ஆண்டுகளில் ஓய்வுபெறும் வயதை எட்டுவார்கள்.

கடந்த இரு தசாப்தங்களில் சுகாதார பணியாளர்களின் எண்ணிக்கை 52% உயர்ந்து, உலகளவில் 7 கோடிக்கும் அதிகமானோர் இத்துறையில் பணியாற்றி வந்தாலும், ஓய்வுபெறுபவர்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப புதிய பணியாளர்கள் இத்துறையில் சேரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

இரட்டை நெருக்கடியில் நாடுகள்: பணியாளர்கள் ஓய்வுபெறும் அதே வேளையில், உலக மக்கள் தொகையில் முதியோர்களின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது. முதியவர்களுக்கு அதிக அளவிலான மருத்துவ பராமரிப்பு தேவைப்படும் சூழலில், மருத்துவர்களின் பற்றாக்குறை ஏற்படுவது சுகாதார அமைப்புகளுக்கு மிகப்பெரிய “இரட்டை நெருக்கடியை” உருவாக்கும் என உலக சுகாதார அமைப்பின் அதிகாரி டாக்டர் காசும் டயாலோ தெரிவித்துள்ளார்.

2030-இல் உருவாகும் மிகப்பெரிய தட்டுப்பாடு: வரும் 2030-ஆம் ஆண்டிற்குள் உலகளவில் சுமார் 1.11 கோடி சுகாதாரப் பணியாளர்களுக்கு தட்டுப்பாடு ஏற்படும் என்று கணிக்கப்பட்டுள்ளது. 67 நாடுகள் தங்கள் மக்களின் அடிப்படை சுகாதாரத் தேவைகளைக் கூட பூர்த்தி செய்ய முடியாத நிலைக்குத் தள்ளப்படும். ஆப்பிரிக்க நாடுகளை விட ஐரோப்பிய நாடுகளில் மருத்துவர்களின் எண்ணிக்கை 13 மடங்கு அதிகமாக இருந்தாலும், பணக்கார நாடுகளில்தான் வயது முதிர்ந்த மருத்துவர்களின் எண்ணிக்கை அதிகமாக உள்ளது.

எனவே, இந்த ஏற்றத்தாழ்வுகளைக் களைந்து புதிய மருத்துவப் பணியாளர்களை உருவாக்குவது உலக நாடுகளின் அவசரத் தேவையாக மாறியுள்ளது குறிப்பிடத்தக்கது.

1newsnationuser5

You May Like