உத்தரப் பிரதேச மாநிலம் ஆக்ராவில் சுரேந்திர சர்மா என்ற நபர் ஒருவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு ரூபி என்ற மனைவி உள்ளார். இந்நிலையில், திடீரென சுரேந்திர சர்மா காணாமல் போயுள்ளார். இதையடுத்து, சுரேந்திர சர்மா மாயமானது குறித்து காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. புகாரின் அடிப்படையில் வழக்கு பதிவு செய்த போலீசார், சுரேந்திர சர்மாவை தீவிரமாக தேடி வந்தனர்.
கடந்த 45 நாட்களாக தேடியும் போலிசாரால் சுரேந்திர சர்மாவை கண்டுபிடிக்க முடியவில்லை. இந்நிலையில் சுரேந்திர சர்மாவின் மனைவி ரூபி வழங்கும் தகவல்கள் முன்னுக்கு பின் முரணாக இருப்பதாக சுரேந்திர சர்மாவின் சகோதரர் போலீசாரிடம் புகார் அளித்துள்ளார். இதையடுத்து, போலீசார் சுரேந்திர சர்மாவின் வீட்டில் தீவிரமாக சோதனை மேற்கொண்டனர்.
அப்போது, அவரது வீட்டின் கழிப்பறையில் புதிதாக சிமெண்ட் பூச்சு செய்யப்பட்டிருந்தது. இதனால் சந்தேகம் அடைந்த போலீசார், அதை உடைத்து பார்த்துள்ளனர். அப்போது சிமெண்ட் தளத்திற்கு அடியில் சுரேந்திராவின் உடல் புதைக்கப்பட்டிருந்தது. இதனால் பெரும் அதிர்ச்சி அடைந்த போலீசார், சுரேந்திர சர்மாவின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும், சுரேந்திர சர்மாவின் மனைவி ரூபியிடம் நடத்தப்பட்ட தீவிர விசாரணையில் அவர் தனது கணவர் சுரேந்திர சர்மாவை கொலை செய்து புதைத்தது தெரியவந்துள்ளது. இந்நிலையில், இந்த கொடூர செயலுக்கு வேறு யாரும் உதவியாக இருந்தார்களா என்ன காரணம் என்பது குறித்து போலீசார் தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.
Also Read: உங்க உடல் எடையை சட்னு குறைக்கணுமா? அப்போ இதை சாப்பிட்டு பாருங்க… வித்தியாசம் உங்களுக்கே தெரியும்!


