“அந்த தோல்வியை தாங்க முடியவில்லை”.. 2019 உலகக்கோப்பை குறித்து மனம் திறந்த விராட் கோலி..

virat ipl

2019 உலகக்கோப்பை அரையிறுதியில் நியூசிலாந்திடம் அடைந்த தோல்வி தன்னை மனதளவில் மிகவும் பாதித்ததாக இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் விராட் கோலி தெரிவித்துள்ளார்.


2019 உலகக்கோப்பை தொடரின் முதல் அரையிறுதியில் இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகள் மோதின. மான்செஸ்டரில் நடைபெற்ற இந்தப் போட்டி மழை காரணமாக இரண்டு நாட்களுக்கு நீடித்தது. முதலில் பேட்டிங் செய்த நியூசிலாந்து அணி 46.1 ஓவர்களில் 211/5 என்ற நிலையில் இருந்தபோது மழை குறுக்கிட்டது. இதையடுத்து போட்டி அடுத்த நாளுக்கு ஒத்திவைக்கப்பட்டது.

தொடர்ந்து விளையாடிய நியூசிலாந்து அணி 50 ஓவர்கள் முடிவில் 239/8 ரன்கள் எடுத்தது. 240 ரன்கள் என்ற இலக்கை துரத்திய இந்திய அணிக்கு ஆரம்பமே அதிர்ச்சியாக அமைந்தது. ரோஹித் சர்மா, விராட் கோலி உள்ளிட்ட முக்கிய வீரர்கள் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர்.

எனினும், ரிஷப் பந்த் மற்றும் ஹர்திக் பாண்டியா உள்ளிட்டோரின் ஆட்டத்தால் இந்திய அணி வெற்றிக்கான போராட்டத்தைத் தொடர்ந்தது. இறுதியில் இந்திய அணி 221 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. இதனால் நியூசிலாந்து அணி 18 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று இறுதிப்போட்டிக்கு முன்னேறியது.

இந்தத் தோல்வியில் ரசிகர்களின் நினைவில் ஆழமாக பதிந்த தருணம், 49-வது ஓவரில் எம்.எஸ். தோனி ரன் அவுட் ஆன சம்பவம். மார்ட்டின் கப்டில் வீசிய துல்லியமான த்ரோவில் தோனி ரன் அவுட் ஆனதும், இந்தியாவின் இறுதிப்போட்டி கனவு முடிவுக்கு வந்தது.

இந்தத் தோல்வி குறித்து சமீபத்திய பேட்டியில் பேசிய விராட் கோலி, 2019-ம் ஆண்டு அரையிறுதி தோல்வி தனக்கு மிகப்பெரிய அதிர்ச்சியாக இருந்ததாகக் குறிப்பிட்டுள்ளார்.

2015 உலகக்கோப்பை அரையிறுதியில் ஆஸ்திரேலியாவிடம் தோல்வியடைந்தபோதும், அந்த அணியின் பலம் மற்றும் பலவீனங்களை இந்திய வீரர்கள் நன்கு அறிந்திருந்ததாக கோலி கூறினார். ஆனால் 2019-ல் நியூசிலாந்துக்கு எதிரான போட்டி முற்றிலும் வேறுபட்ட அனுபவமாக அமைந்ததாக அவர் தெரிவித்தார்.

மழையால் முதல் நாள் ஆட்டம் பாதியில் நிறுத்தப்பட்டது, அடுத்த நாள் புதிய பந்துடன் நியூசிலாந்து வேகப்பந்து வீச்சாளர்கள் இந்திய அணிக்கு கடும் நெருக்கடி கொடுத்தது ஆகியவை போட்டியின் போக்கை மாற்றியதாக கோலி விளக்கினார்.

நியூசிலாந்து வீரர்கள் அன்றைய சூழ்நிலையை சிறப்பாக பயன்படுத்திக் கொண்டதாகவும், இந்திய அணியில் இருந்த தயக்கத்தையும் அழுத்தத்தையும் தங்களுக்கு சாதகமாக மாற்றிக் கொண்டதாகவும் கோலி கூறினார்.

“அந்த தோல்வியை ஏற்றுக்கொண்டு அதிலிருந்து மீள்வது மிகவும் கடினமாக இருந்தது. நான் மிகவும் உடைந்து போனேன். அதற்குப் பிறகு இரண்டு மாதங்களுக்கு மனதளவில் முற்றிலும் பாதிக்கப்பட்டிருந்தேன்” என்று விராட் கோலி தெரிவித்துள்ளார்.

Also Read: காதலை விட இதுதான் முக்கியம்.. ரன்பீர் குறித்து ஆலியா சொன்ன அந்த விஷயம்!

Saranya

Next Post

குழந்தைகளுக்கு எச்.ஐ.வி.. மருத்துவமனையில் நடந்தது என்ன? விசாரணையில் அதிர்ச்சி தகவல்..

Sun Sep 27 , 2026
கராச்சியில் பெரும்பாலும் குழந்தைகளை உள்ளடக்கிய 140 பேருக்கு எச்.ஐ.வி தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள சம்பவம், அங்குள்ள மருத்துவமனைகளில் நோய்த்தொற்று தடுப்பு நடைமுறைகள் குறித்த கேள்விகளை எழுப்பியுள்ளது. இந்த விவகாரம் தொடர்பாக பல்வேறு விசாரணைகளும் நடைபெற்று வருகின்றன. கராச்சியில் உள்ள குல்சூம் பாய் வாலிகா மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற குழந்தைகளில் பலருக்கு பின்னர் எச்.ஐ.வி இருப்பது கண்டறியப்பட்டது. இதையடுத்து பாதிக்கப்பட்ட குழந்தைகளின் குடும்பங்கள் மருத்துவமனையில் பயன்படுத்தப்பட்ட ஊசி மற்றும் மருத்துவ உபகரணங்கள் […]
HIV children 2

You May Like