மாலையில் டீயுடன் சாப்பிட இதை செஞ்சு பாருங்க..! ஒன்னு கூட மிச்சம் இருக்காது!

costliest tea 1

மாலை நேரத்தில் டீ அல்லது காபியுடன் சூடாக ஏதாவது ஸ்நாக்ஸ் சாப்பிட வேண்டும் என்று தோன்றுகிறதா? வீட்டில் இருக்கும் உருளைக்கிழங்கு, ரவை வைத்து இந்த சிம்பிளான ஸ்நாக்ஸை செய்து பாருங்க. அதிக பொருட்கள் தேவையில்லை; செய்வதும் ரொம்ப ஈஸி. சுவையாகவும் மொறுமொறுப்பாகவும் இருப்பதால் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை விரும்பி சாப்பிடுவார்கள்.


முதலில் 2 உருளைக்கிழங்கை வேகவைத்து நன்றாக மசித்துக் கொள்ளுங்கள். அதனுடன் 1 கப் ரவையை சேர்க்கவும். தேவையான அளவு உப்பு, சிறிதளவு மிளகாய்த்தூள், கொத்தமல்லி மற்றும் பொடியாக நறுக்கிய பச்சை மிளகாய் சேர்த்து நன்றாகக் கலக்கவும். தேவையான அளவு தண்ணீர் தெளித்து, கையில் பிடிக்கும் பதத்திற்கு மாவை தயார் செய்ய வேண்டும்.

பின்னர் சிறிய உருண்டைகளாக எடுத்து, கைகளால் சற்று தட்டி வடை போல செய்து வைத்துக் கொள்ளுங்கள். ஒரு கடாயில் எண்ணெயை சூடாக்கி, தயாரித்து வைத்துள்ளவற்றை மிதமான தீயில் போட்டு இருபுறமும் பொன்னிறமாகவும் மொறுமொறுப்பாகவும் வரும் வரை பொரித்தெடுக்கவும்.

சூடாக இருக்கும்போதே டீ அல்லது காபியுடன் பரிமாறினால் சுவை வேற லெவலில் இருக்கும். வீட்டில் இருக்கும் இரண்டு பொருட்களிலேயே இப்படி ஒரு சூப்பரான மாலை நேர ஸ்நாக்ஸ் செய்ய முடியும் என்பதால், ஒருமுறை செய்து பாருங்க.. தட்டில் ஒன்னு கூட மிச்சம் இருக்காது!

Also Read: “அம்மாவை ஜெயிலில் போடுங்க!” போலீஸ் ஸ்டேஷனில் 3 வயது சிறுவன் கொடுத்த புகார்..! வைரலாகும் வீடியோ..

Saranya

Next Post

'அரசியலுக்கு வந்ததே நான் செய்த மிகப்பெரிய தவறு'!. தற்கொலை செய்துகொண்ட மே.வங்க முன்னாள் துணை சபாநாயகரின் உருக்கமான கடிதம்!

Mon Aug 17 , 2026
மேற்கு வங்க சட்டப்பேரவையின் முன்னாள் துணை சபாநாயகரும், திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவருமான டாக்டர் ஆசிஷ் பானர்ஜி, பிர்பூமின் ராம்பூர்ஹாட் பகுதியில் உள்ள கட்சி அலுவலகத்தில் நேற்று சடலமாக மீட்கப்பட்டது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அவரது உடலுக்கு அருகே கைப்பற்றப்பட்ட தற்கொலை கடிதம் தற்போது அரசியல் களத்தில் பெரும் பரபரப்பை கிளப்பியுள்ளது. அவரது தற்கொலை கடிதத்தில் கூறியுள்ளதாவது, தனது மாணவர் பருவத்திலிருந்தே தான் அரசியலில் ஈடுபட்டு வருவதாகவும், ஆனால் […]
AsishBanerjeeletter

You May Like