வரும் மாதங்களில் பெரும் உணவு பஞ்சம் ஏற்படும்!. ஜெய்சங்கர் விடுத்த பகீர் எச்சரிக்கை!. தத்தளிக்கும் உலக நாடுகள்!.

food crisis jaishankar 30kb

உக்ரைன் மற்றும் ஈரான்-வளைகுடா பகுதிகளில் நிலவி வரும் மோதல்களால், தானியங்கள் மற்றும் உரங்களின் விநியோகம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. இதனால், வரும் மாதங்களில் உலகம் முழுவதும் ‘பெரும் உணவு நெருக்கடி’ ஏற்பட வாய்ப்புள்ளதாக வெளியுறவுத் துறை அமைச்சர் எஸ். ஜெய்சங்கர் எச்சரித்துள்ளார்.


திங்களன்று நியூயார்க்கில் உள்ள ‘ஆசியா சொசைட்டி’ (Asia Society) அமைப்பு நடத்திய உரையாடல் நிகழ்வில் பேசிய அவர், உக்ரைன் மற்றும் தற்போதைய ஈரான்-வளைகுடா மோதல்கள், வளரும் நாடுகளின் பொருளாதாரத்தில் மிக மோசமான தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளன. எரிசக்தி, உணவு, உரம் மற்றும் நிதி சார்ந்த அழுத்தங்கள் ஒன்றிணைந்து வளரும் நாடுகளுக்கு மிகப் பெரிய நெருக்கடியைக் கொடுத்து வருகின்றன.

சர்வதேச சந்தையில் எரிசக்தி விநியோகம் மிகவும் நெருக்கடியாக இருப்பது ஒரு முக்கியக் கவலையாக உள்ளது. எண்ணெய் விநியோகத்தைப் பாதிக்கக்கூடிய அரசியல் முடிவுகள் இந்த நிலைமையை மேலும் சிக்கலாக்கலாம். உலக நாடுகள் விலைவாசியைக் கட்டுப்படுத்த நினைக்கும் வேளையில், இத்தகைய முடிவுகள் எண்ணெய் விலையை மேலும் அதிகரிக்கச் செய்துவிடும்.

எண்ணெய் விநியோகப் பாதுகாப்பு ஒருபுறம் இருக்க, அதனைச் சார்ந்த அரசியலும் இதனுடன் கலக்கிறது. இவை இரண்டும் ஒன்றோடொன்று இணைந்து, தற்போதைய சூழலை ஒரு ‘இரட்டை நெருக்கடியாகவோ’ அல்லது ‘தீவிரமடைந்த நெருக்கடியாகவோ’ மாற்றியுள்ளன,” என்று அவர் கூறினார்.

உலகளாவிய மோதல்கள் காரணமாக முதலீடுகள் பாதுகாப்பான நாடுகளை நோக்கி நகர்வதால், வளரும் நாடுகள் நிதி நெருக்கடியையும் சேர்த்தே எதிர்கொள்ள வேண்டிய கட்டாயத்தில் உள்ளதாக சுட்டிக்காட்டிய அவர், எல் நினோ போன்ற காலநிலை மாற்றமும் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. ஏற்கனவே உரங்களுக்கு பெரும் தட்டுப்பாடு நிலவி வருகிறது. இவை விவசாயத்தில் கடுமையாக சிக்கல்களை ஏற்படுத்துகின்றன.

1newsnationuser5

Next Post

மது மட்டுமல்ல.. இந்த அன்றாட பழக்கங்களும் கல்லீரலை பாதிக்கலாம்!

Wed Sep 30 , 2026
மது அருந்தும் பழக்கமே கல்லீரல் பாதிப்புக்கு முக்கிய காரணம் என்ற எண்ணம் பலரிடமும் உள்ளது. ஆனால், மதுவைத் தவிர உணவுப் பழக்கம், உடல் எடை, உடற்பயிற்சி இல்லாமை, சில உடல்நலப் பிரச்சினைகள் மற்றும் மருந்துகளை முறையின்றி பயன்படுத்துவது உள்ளிட்ட பல காரணிகளும் கல்லீரல் ஆரோக்கியத்தை பாதிக்கக்கூடும். தற்போது அதிகரித்து வரும் கல்லீரல் பிரச்சினைகளில் கொழுப்பு கல்லீரல் முக்கியமானதாக உள்ளது. குறிப்பாக, Metabolic Dysfunction-Associated Steatotic Liver Disease (MASLD) எனப்படும் […]
Liver Failure

You May Like