வரலாற்றில் இல்லாத வானிலை மாற்றம்! குளிர்காலத்தில் வரப்போகும் பேராபத்து! பூமிக்கு காத்திருக்கும் புதிய பேரிடர்கள்!

Elnino 2026

பசிபிக் பெருங்கடலில் ஏற்பட்டுள்ள தீவிர வெப்பநிலை உயர்வு காரணமாக உலகம் முழுவதும் வரலாறு காணாத வானிலை மாற்றங்களும் இயற்கை பேரிடர்களும் ஏற்படும் அபாயம் உருவாகியுள்ளதாக சர்வதேச வானிலை மையம் எச்சரித்துள்ளது. பொதுவாக பசிபிக் பெருங்கடலின் மேற்பரப்பு வெப்பநிலை சராசரியை விட 1.5 டிகிரி செல்சியஸ் அதிகரிக்கும் போது ‘எல் நினோ’ உருவாகும் சூழலில், நடப்பாண்டில் இந்த வெப்பநிலை உயர்வு 3.0 டிகிரி செல்சியஸ் வரை எகிறி ‘சூப்பர் எல் நினோ’ (Super El Nino) தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.


இதற்கு முன்பு கடந்த 1997-98 மற்றும் 2015-16 ஆகிய ஆண்டுகளில் இதேபோன்று 3 டிகிரி செல்சியஸ் வரை வெப்பநிலை உயர்ந்து பெரும் வறட்சி, கடுமையான வெள்ளப்பெருக்கு மற்றும் அதீத சூறாவளிகளை உலகளவில் உருவாக்கியது. ஆனால், முந்தைய காலங்களை விட தற்போது பூமியின் சராசரி வெப்பநிலையே ஏற்கனவே மிக அதிகமாக உள்ள நிலையில், பசிபிக் பெருங்கடல் மட்டுமின்றி அட்லாண்டிக் மற்றும் இந்தியப் பெருங்கடல்களும் ஒரே நேரத்தில் வரலாறு காணாத வெப்பத்தை எட்டியுள்ளன.

கடந்த கோடை காலத்தில் ஐரோப்பிய நாடுகளில் வீசிய கடும் வெப்ப அலையால் பல்லாயிரக்கணக்கான மக்கள் உயிரிழந்த நிலையில், கோடை முடிந்து அடுத்து வரும் மழை மற்றும் குளிர்காலங்களில் முன்னெப்போதும் இல்லாத மிக தீவிர சக்தி வாய்ந்த புயல்கள், அதிவேக காற்று மற்றும் பெருமழை தாக்கும் என கணிக்கப்பட்டுள்ளது. இது உலகளாவிய அளவில் மிகப்பெரிய பொருளாதார மற்றும் மனித இழப்புகளை ஏற்படுத்தக்கூடும் என்பதால் உலக நாடுகள் உஷாராக இருக்குமாறு சர்வதேச வானிலை ஆய்வாளர்கள் அறிவுறுத்தியுள்ளனர்.

Read More : மத்திய அமைச்சராகிறார் நயினார் நாகேந்திரன்? எல்.முருகனுக்கு மீண்டும் பாஜக தலைவர் பதவி? அரசியலில் பரபரப்பு!

Next Post

சோர்வு, முடி உதிர்வு எனத் தொடர்ந்து அவதிப்படுறீங்களா?.. உணவில் இந்த 5 பொருட்களைச் சேர்த்துக்கோங்க!

Wed Oct 14 , 2026
எப்போதும் சோர்வாக இருக்கிறதா? சிறிது வேலை செய்தாலே உடல் பலவீனமாகிறதா? முடி அதிகமாகக் கொட்டுகிறதா? இதற்குப் பின்னால் இரும்புச்சத்துக் குறைபாடு இருக்க வாய்ப்புள்ளது. குறிப்பாக, பெண்கள் இந்த அறிகுறிகளை அலட்சியப்படுத்தாமல் உணவில் போதிய இரும்புச்சத்து கிடைக்கிறதா என்பதைக் கவனிக்க வேண்டும். உடலில் ஹீமோகுளோபின் உருவாக இரும்புச்சத்து அவசியம். இது குறையும்போது ரத்தசோகை ஏற்படலாம். அதன் காரணமாகச் சோர்வு, உடல் பலவீனம், தலைச்சுற்றல் உள்ளிட்ட பாதிப்புகள் உண்டாகலாம். உணவில் இரும்புச்சத்து நிறைந்த […]
tired fatigue

You May Like