அரிசி விலை ரூ.100-ஐ தொடுமா?.. தமிழக அரசு எடுக்கப்போகும் அதிரடி நடவடிக்கை!

most expensive rice

தமிழகத்தில் அன்றாட உணவுக்கான செலவு அதிகரித்து வரும் நிலையில், அரிசி விலையைக் கட்டுப்படுத்த தமிழக அரசு புதிய முயற்சியில் இறங்கியுள்ளது. வெளிமாநிலங்களில் இருந்து அதிக அளவில் சன்ன ரக அரிசியைக் கொள்முதல் செய்து, கூட்டுறவு அங்காடிகள் வாயிலாகக் குறைந்த விலையில் விற்பனை செய்வது குறித்து ஆலோசனை நடைபெற்று வருகிறது.


சந்தையில் தற்போது சன்ன ரக அரிசியின் விலை கிலோவுக்கு ரூ.70 முதல் ரூ.80 வரை விற்பனையாகிறது. கடந்த ஆகஸ்ட் மாதத்தில் இதே அரிசி ரூ.50 முதல் ரூ.60 வரை கிடைத்த நிலையில், சில மாதங்களிலேயே கிலோவுக்கு ரூ.20 வரை விலை உயர்ந்துள்ளது. இதனால் மாதாந்திர மளிகைச் செலவுகளைச் சமாளிக்க முடியாமல் குடும்பங்கள் சிரமத்தை எதிர்கொண்டுள்ளன. பருப்பு வகைகள், சமையல் எண்ணெய் உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்களின் விலையும் உயர்ந்துள்ளது.

இந்தச் சூழலில், விலைவாசி உயர்வைக் கட்டுப்படுத்துவதற்கான நடவடிக்கைகள் குறித்து உணவுத்துறை அமைச்சர் வெங்கட்ரமணன் தலைமையில் சென்னை தலைமைச் செயலகத்தில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. தலைமைச் செயலாளர் சாய் குமார், உணவுத்துறைச் செயலாளர் அமுதா, நிதித்துறைச் செயலாளர் சித்திக் உள்ளிட்ட அதிகாரிகள் இதில் பங்கேற்றனர்.

கூட்டத்தில் விவாதிக்கப்பட்ட முக்கியத் திட்டங்களில் ஒன்று, வெளிமாநிலங்களில் இருந்து சன்ன ரக அரிசியைக் கொள்முதல் செய்து கூட்டுறவு அங்காடிகள் மூலம் மலிவு விலையில் விற்பனை செய்வதாகும். இதற்காக இந்திய உணவுக் கழகம் மற்றும் பிற மாநிலங்களில் அரிசி இருப்பு, கொள்முதல் வாய்ப்புகள், கிடைக்கக்கூடிய அளவு ஆகிய விவரங்களை அதிகாரிகள் சேகரித்து வருகின்றனர்.

திட்டத்தின்படி, ஒரு கிலோ சன்ன ரக அரிசியை ரூ.40 முதல் ரூ.50 வரை விற்பனை செய்வது குறித்து பரிசீலிக்கப்படுகிறது. சுமார் ஒரு லட்சம் டன் அரிசியைக் கொள்முதல் செய்வதற்கான வாய்ப்பு உறுதியானால், கூட்டுறவு அங்காடிகள் வாயிலாக விற்பனையைத் தொடங்க அரசு நடவடிக்கை எடுக்கலாம்.

இதற்கிடையே, தீபாவளிக்குள் அரிசி விலை கிலோவுக்கு ரூ.100 வரை உயரக்கூடும் என்ற அச்சமும் நிலவுகிறது. எனவே, அரசு திட்டமிட்டுள்ள கொள்முதல் நடவடிக்கை நடைமுறைக்கு வந்தால், பொதுமக்களுக்கு குறைந்த விலையில் அரிசி கிடைக்குமா என்பதே தற்போது எழுந்துள்ள எதிர்பார்ப்பாக உள்ளது.

Also Read: ஆம்புலன்ஸ் இல்லை.. பணமும் இல்லை.. மனைவியின் உடலைத் தள்ளுவண்டியில் எடுத்துச் சென்ற முதியவர்..

Saranya

Next Post

2 நாட்களாக சாலையில் கிடந்த தந்தையின் உடல்.. உடைகளை வைத்து அடையாளம் கண்ட மகன்!

Wed Oct 14 , 2026
உத்தரப் பிரதேசத்தில் காணாமல் போன 56 வயது முதியவரின் உடல், தேசிய நெடுஞ்சாலையில் சுமார் இரண்டு நாட்களாகக் கிடந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சாலைப் பணிகள் நடைபெற்ற பகுதியில் உடல் கிடந்ததால், அதனை யாரும் கவனிக்காத நிலையில், அவ்வழியாகச் சென்ற வாகனங்கள் உடலின் மீது ஏறிச் சென்றதாகத் தகவல் வெளியாகியுள்ளது. ஜான்சி மாவட்டத்தைச் சேர்ந்த ஜக்மோகன் திவாரி, கடந்த அக்டோபர் 9ஆம் தேதி தனது வயலுக்குச் சென்றுள்ளார். அதன் பிறகு […]
d5f489cbede5b6557d941233f67301788e12f8f04466dbd6ce396140919dd815

You May Like