குளிக்கத் தயாரான 14 வயது சிறுமி.. மின்சாரம் தாக்கி உயிரிழப்பு!

4c5c512885c6ffbc99990d1c07a8986ccdfc7b4a98d1a43f65c8e7e7f07b693b

உறவினரின் இறுதிச் சடங்கில் பங்கேற்பதற்காகக் குடும்பத்தினர் தயாராகிக் கொண்டிருந்த நேரத்தில், 14 வயது பள்ளி மாணவி மின்சாரம் தாக்கி உயிரிழந்த சம்பவம் மகாராஷ்டிராவில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.


மகாராஷ்டிர மாநிலம், சத்ரபதி சம்பாஜிநகரைச் சேர்ந்த யக்ஞா பிரகாஷ் தேவ்ரே (14), அப்பகுதியில் 9-ஆம் வகுப்பு படித்து வந்தார். சம்பவத்தன்று அதிகாலையில் குளிப்பதற்காகத் தண்ணீரைச் சூடாக்க முடிவு செய்த அவர், ஒரு வாளியில் மின்சார வாட்டர் ஹீட்டரைப் பயன்படுத்தியுள்ளார்.

அப்போது தண்ணீரில் மின்சாரம் கசிந்துள்ளது. இதை அறியாமல் தண்ணீரைத் தொட்ட மாணவி, மின்சாரம் தாக்கியதில் தூக்கி வீசப்பட்டு மயங்கி விழுந்துள்ளார். அவரது அலறல் சத்தத்தைக் கேட்ட குடும்பத்தினர் உடனடியாக அறைக்குச் சென்று பார்த்தபோது, மாணவி ஆபத்தான நிலையில் கிடந்ததைக் கண்டு அதிர்ச்சியடைந்தனர்.

நேரத்தை வீணாக்காமல் அவரை மீட்டு மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். இருப்பினும், செல்லும் வழியிலேயே மாணவி உயிரிழந்தார். இதனால் குடும்பத்தினர் நிலைகுலைந்து போயினர். உறவினரின் இறுதிச் சடங்கிற்குச் செல்ல வேண்டியிருந்த நிலையில், வீட்டில் நிகழ்ந்த இந்தத் துயரம் அனைவரையும் கண்ணீரில் ஆழ்த்தியுள்ளது.

மின்சார வாட்டர் ஹீட்டரைப் பயன்படுத்தும்போது ஏற்படும் சிறிய கவனக்குறைவுகூட உயிருக்கு ஆபத்தாக மாறலாம் என்பதை இந்தச் சம்பவம் உணர்த்துகிறது. மின்சாரத்தில் இயங்கும் தண்ணீர் சூடாக்கும் சாதனங்களைப் பயன்படுத்தும்போது, மின்கசிவு இல்லாததை உறுதிப்படுத்துவதுடன், பாதுகாப்பு வழிமுறைகளையும் கட்டாயம் பின்பற்ற வேண்டும்.

Also Read: “எனக்கு அப்பா இல்லை”.. தாய்க்காக சிறுவன் செய்துவரும் செயல்.. மனதை உருக்கிய பெண்ணின் உதவி!

Saranya

Next Post

WI-க்கு எதிரான 5வது டி20!. திடீர் என்ட்ரி கொடுத்த புவனேஷ்வர் குமார்!. பிசிசிஐ எடுத்த அதிரடி முடிவு!

Fri Oct 16 , 2026
வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான ஐந்தாவது மற்றும் கடைசி டி20 கிரிக்கெட் போட்டிக்கான இந்திய அணியில் மூத்த வேகப்பந்து வீச்சாளர் புவனேஷ்வர் குமார் சேர்க்கப்பட்டுள்ளார். பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் நடைபெறும் இப்போட்டிக்கு முன்னதாக இந்த மாற்றம் செய்யப்பட்டுள்ளது. மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான நான்காவது டி20 போட்டியின் போது, இந்திய அணியின் முன்னணி வேகப்பந்து வீச்சாளர் அர்ஷ்தீப் சிங்கிற்கு தோள்பட்டையில் காயம் ஏற்பட்டது. இதனால் அவர் உடனடியாக அணியில் மாற்றப்படுவாரா என்ற […]
Bhuvneshwar Kumar 30kb

You May Like