மனைவியுடன் தகராறு.. 9 மாதக் குழந்தையைப் பாலத்திலிருந்து வீசிய தந்தை!

WhatsApp Image 2026 07 06 at 11.38.03 AM

மனைவியுடன் ஏற்பட்ட தகராறு எல்லை மீறியதில், 9 மாத ஆண் குழந்தையைப் பாலத்திலிருந்து கீழே வீசியதாக 23 வயது இளைஞரை மும்பை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். படுகாயமடைந்த குழந்தை மருத்துவமனையில் தீவிரக் கண்காணிப்பில் சிகிச்சை பெற்று வருகிறது.


மும்பையின் காட்கோபர் ரயில் நிலையத்திற்கு வெளியே உள்ள நடைமேம்பாலத்தில் கடந்த அக்டோபர் 25ஆம் தேதி இரவு இந்தச் சம்பவம் நடந்துள்ளது. அப்போது 22 வயதான ஆர்த்தி ஜாபர் ஷேக், தனது 9 மாத மகன் ஆரவ்வுடன் அங்கு நின்றிருந்தார். அங்கு வந்த அவரது கணவர் ஜாபர் ஷேக், குடும்பப் பிரச்சினை தொடர்பாக ஆர்த்தியுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார்.

வாக்குவாதம் தீவிரமடைந்த நிலையில், குழந்தையைத் தன்னுடன் அழைத்துச் செல்ல ஜாபர் முயன்றதாகக் கூறப்படுகிறது. ஆர்த்தி அதைத் தடுக்க முயன்றபோது, அவரைத் திட்டிய ஜாபர், ஆத்திரத்தில் குழந்தையை நடைமேம்பாலத்திலிருந்து கீழே வீசியதாகப் புகார் எழுந்துள்ளது.

கீழே விழுந்ததில் குழந்தை ஆரவ்வுக்குப் பலத்த காயங்கள் ஏற்பட்டன. சம்பவத்தை அறிந்த அப்பகுதி மக்கள் மற்றும் காவல்துறையினர் உடனடியாக உதவிக்கு வந்தனர். முதலில் குழந்தை ராஜவாடி மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டது. பின்னர் மேல் சிகிச்சைக்காக சியோன் மருத்துவமனைக்கு மாற்றப்பட்டது. அங்கு மருத்துவர்கள் குழந்தையின் உடல்நிலையைத் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர்.

ஆர்த்தி அளித்த புகாரின் அடிப்படையில், குழந்தையைக் கொல்லும் நோக்கில் கீழே வீசியதாக ஜாபர் மீது காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து கைது செய்துள்ளனர். சம்பவத்திற்கான முழுமையான பின்னணி மற்றும் குடும்பத் தகராறுக்கான காரணம் குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது.

மும்பையின் கோரேகான் பகுதியில், அடுக்குமாடிக் குடியிருப்பின் ஆறாவது மாடியிலிருந்து குழந்தை கீழே வீசப்பட்டு உயிரிழந்ததாக எழுந்த மற்றொரு சம்பவம் தொடர்பான விசாரணை நடைபெற்று வரும் நிலையில், காட்கோபரில் நடந்துள்ள இந்தச் சம்பவம் குழந்தைகளின் பாதுகாப்பு குறித்த கவலையை மேலும் அதிகரித்துள்ளது.

Also Read: பெற்றோர்களே கவனம்! கழுத்தை இறுக்கி விளையாடிய சிறுவர்கள்.. துடிதுடித்து பலியான 7 வயது சிறுவன்!

Saranya

Next Post

AI மனிதகுலத்தையே அழிக்குமா? IPO-க்கு முன் ஆந்த்ரோபிக் வெளியிட்ட 94 பக்க எச்சரிக்கைகள்!

Wed Oct 28 , 2026
செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்பத்தின் வளர்ச்சி மனிதகுலத்திற்கு மிகப்பெரிய நன்மைகளை வழங்கும் என்ற எதிர்பார்ப்பு ஒருபுறம் இருக்க, அதுவே பேரழிவை ஏற்படுத்தும் ஆபத்தும் இருப்பதாக முன்னணி AI நிறுவனமான ஆந்த்ரோபிக் எச்சரித்துள்ளது. புற்றுநோய் உள்ளிட்ட நோய்களுக்கான தீர்வுகளைக் கண்டறிய AI உதவக்கூடும் எனக் கூறும் அதே நிறுவனம், கட்டுப்பாடற்ற வளர்ச்சி மனிதகுலத்தின் இருப்புக்கே அச்சுறுத்தலாக மாறக்கூடும் என்றும் தனது முதலீட்டாளர்களுக்கான ஆவணத்தில் குறிப்பிட்டுள்ளது. பங்குச் சந்தையில் பட்டியலிடுவதற்கான ஆரம்பப் பொதுப் […]
Govt Warns AI Agents 30kb

You May Like