தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை வெளிநாடு செல்ல, பிரதமர் மோடி அனுமதி அளித்துள்ளார்.
தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை உயர் கல்விக்காக பிரிட்டன் செல்ல இருப்பதாக ஏற்கனவே சொல்லப்பட்டு வந்தது. சர்வதேச அரசியல் குறித்த சான்றிதழ் படிப்பில் பங்கேற்க அண்ணாமலை லண்டனுக்கு செல்ல உள்ளார். இந்தியாவில் உள்ள 12 அரசியல் தலைவர்களை ஆண்டுதோறும் இங்கிலாந்தில் உள்ள ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகம் சான்றிதழ் படிப்புக்கு அழைப்பு விடுத்து வருகிறது.
இந்த ஆண்டில், தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை கலந்துகொள்கிறார். வரும் செப்டம்பர் 2-ஆம் தேதி முதல் நடைபெறும் இந்த வகுப்பில் பங்கேற்க, அதற்கு ஒரு வாரம் முன்பு சென்னையில் இருந்து அண்ணாமலை லண்டனுக்கு செல்ல இருக்கிறார். அண்ணாமலை வெளிநாடு செல்ல, பிரதமர் மோடி அனுமதி அளித்துள்ளார்.
4 மாத காலம் நடைபெறும் இந்த வகுப்புகளில் கலந்துகொள்ளும் அண்ணாமலை, லண்டனில் இருந்தபடியே மாநிலத் தலைவர் பதவியையும் கவனிப்பார் என்று கூறப்பட்டது. அதைத் தொடர்ந்து தமிழக பாஜகவுக்கு புதிய மாநில தலைவராக நயினார் நாகேந்திரனை நியமிக்க முடிவு செய்துள்ளதாக கட்சி வட்டாரத்தில் பேசப்பட்டு வருகிறது. இதனால் கட்சிக்குள் பரபரப்பு கிளம்பி உள்ளது.