fbpx

Budget 2024 | தமிழ்நாடு புறக்கணிப்பு!! கூட்டணிக் கட்சிகளை திருப்திப்படுத்தும் பட்ஜெட் இது..!! – EPS விமர்சனம்

மத்திய பட்ஜெட்டில் தமிழகத்திற்கு எந்தவிதமான புதிய திட்டங்களும் அறிவிக்கப்படாதது ஏமாற்றத்தை அளிக்கிறது என எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி கருத்து தெரிவித்துள்ளார்.

மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று 2024-2025ம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கையை தாக்கல் செய்துள்ளார். மத்திய அரசு தாக்கல் செய்துள்ள பட்ஜெட்டிற்கு கலவையான வரவேற்பு இருக்கிறது. அந்த வகையில், தமிழக எதிர்க்கட்சித் தலைவரும், அ.தி.மு.க பொதுச்செயலாளருமான எடப்பாடி பழனிசாமி பட்ஜெட் ஏமாற்றம் அளிப்பதாக கருத்து தெரிவித்துள்ளார். 

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “மத்திய பட்ஜெட்டில் தமிழகத்திற்கு எந்தவிதமான புதிய திட்டங்களும் அறிவிக்கப்படாதது ஏமாற்றத்தை அளிக்கிறது. குறிப்பாக தமிழகத்திற்கு எந்தவிதமான திட்டங்களும் அறிவிக்கப்படவில்லை. இது தமிழகத்தின் மீது மத்திய அரசுக்கு உள்ள காழ்ப்புணர்ச்சியையே காட்டுகிறது. தமிழகத்திற்கு ஏதாவது நன்மை கிடைக்கும் என்று திமுக மற்றும் கூட்டணிக் கட்சியினருக்கு வாக்களித்து, 39 நாடாளுமன்ற உறுப்பினர்களை தமிழக மக்கள் வெற்றிபெறச் செய்தார்கள். திமுக-கூட்டணிக் கட்சிகளுக்கு 39 நாடாளுமன்ற உறுப்பினர்கள் இருந்தும், தமிழகத்திற்கு எந்த ஒரு திட்டத்தையும் பெற்றுத் தராதது பெருத்த ஏமாற்றத்தை அளிக்கிறது.

பாஜகவின் கூட்டணி கட்சிகள் ஆளும் பீகார், ஆந்திரா உள்ளிட்ட மாநிலங்களுக்கு பெரும்பாலான திட்டங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. இந்த வரவு, செலவு அறிக்கை வடமாநிலங்களையும், பாஜகவின் கூட்டணி கட்சிகள் ஆளும் மாநிலங்களையும் திருப்திப்படுத்தும் வகையில் தயாரிக்கப்பட்டுள்ளதே தவிர ஒட்டுமொத்த இந்தியத் திருநாட்டின் பொருளாதார வளர்ச்சியை சமநிலையோடு ஊக்குவிக்கக்கூடிய அறிக்கையாக இது இல்லை.

நாடாளுமன்ற தேர்தலின்போது பாஜக அளித்த பல வாக்குறுதிகள் இந்த வரவு, செலவு அறிக்கையில் இடம்பெறாதது மக்களுக்கு பெரும் ஏமாற்றத்தை அளித்துள்ளது. இயற்கை விவசாயம், காய்கறி உற்பத்தி தொடர்பாக சில அம்சங்கள் இடம்பெற்றுள்ளன. தற்போதைய அறிவிப்புகள் மூலம் விவசாயிகள் எதிர்பார்த்த நன்மைகள் கிடைக்காது” என எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்துள்ளார்.

Read more ; வண்டியின் நம்பரை வைத்து இதெல்லாம் பண்ணலாமா..? வாகன ஓட்டிகளே கண்டிப்பா தெரிஞ்சிக்கோங்க..!!

English Summary

Leader of Opposition Edappadi Palaniswami said that it is disappointing that no new projects have been announced for Tamil Nadu in the Union Budget.

Next Post

NEET UG | நீட் தேர்வு முடிவுகளை ரத்து செய்ய போதுமான ஆதாரம் இல்லை..!! - உச்சநீதிமன்றம்

Tue Jul 23 , 2024
No NEET-UG retest, Supreme Court says no evidence to suggest systemic breach

You May Like