fbpx

15 மாதங்களுக்கு பிறகு செந்தில் பாலாஜிக்கு ஜாமீன் வழங்கியது உச்ச நீதிமன்றம்…!

முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு உச்சநீதிமன்றம் ஜாமீன் வழங்கியது.

2011-2015 வரையிலான அதிமுக ஆட்சியில் போக்குவரத்து துறை அமைச்சராக இருந்த செந்தில் பாலாஜி, அரசுப் போக்கு வரத்துக் கழகப் பணியாளர்களை நியமிப்பதில் முறைகேட்டில் ஈடு பட்டதாகவும், சட்டவிரோத பணப் பரிமாற்றத்தில் ஈடுபட்டதாகவும் கடந்த ஆண்டு ஜூன் 14-ம் தேதி அமலாக்கத் துறையினரால் கைது செய்யப்பட்டார். இன்று வரை ஜாமீன் கிடைக்காமல் சிறையில் உள்ளார். தனக்கு ஜாமீன் கோரி உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார்.

இந்த வழக்கில் அனைத்துத் தரப்பு வாதங்களும் கடந்த ஆகஸ்ட் 20ம் தேதி முடிந்த நிலையில் தீர்ப்பு தேதி குறிப்பிடாமல் ஒத்தி வைக்கப்பட்டிருந்தது. செந்தில் பாலாஜிக்கு ஜாமின் வழங்க அமலாக்கத்துறை கடும் எதிர்ப்பைத் தெரிவித்திருந்தது. செந்தில் பாலாஜியின் உடல் நிலையை கருத்தில் கொண்டும், ஓராண்டுக்கும் மேலாக சிறையில் இருப்பதாலும் ஜாமின் வழங்க வேண்டும் என்று செந்தில் பாலாஜி தரப்பு கோரிக்கை வைந்திருந்தது. விசாரணை முடிந்து 37 நாட்களுக்கு பிறகு நீதிபதிகள் இன்று தீர்ப்பளித்தனர் .

English Summary

Supreme Court granted bail to Senthil Balaji

Vignesh

Next Post

புதிய ரேஷன் கார்டுக்கு விண்ணப்பித்தவர்களுக்கு குட் நியூஸ்..!! இனி உங்களுக்கும் ரூ.1,000 கிடைக்கப்போகுது..!!

Thu Sep 26 , 2024
Out of 2,89,591 applications for new ration cards in Tamil Nadu, 80,050 new ration cards have been distributed so far. Delivery to the rest is in progress.

You May Like