fbpx

“ஈரானுக்கு அவசியமின்றி செல்ல வேண்டாம் ” அவசர உதவி எண் அறிவிப்பு – இந்திய வெளியுறவு துறை அமைச்சகம்…!

மத்திய கிழக்கில் நிலவும் பதட்டங்களுக்கு மத்தியில் இந்தியர்களுக்கான பயண ஆலோசனையை வெளியுறவு அமைச்சகம் இன்று வெளியிட்டுள்ளது. இஸ்ரேலுக்கும் ஹிஸ்புல்லாவுக்கும் இடையே மோதல் தீவிரமடைந்துள்ள நிலையில், வடக்கு இஸ்ரேல் மீது ஹெஸ்பொல்லா ஏவுகணை தாக்குதல்களை நடத்தி வருகிறது. தொடர்ந்து இஸ்ரேல் மீது ஏவுகணைகள் வீசப்படுவதால் அந்நாட்டில் சைரன்கள் தொடர்ந்து ஒலித்து வருகின்றன. இந்நிலையில் ஈரானுக்கு அவசியமின்றி செல்ல வேண்டாம் என இந்தியர்களுக்கு வெளியுறவுத்துறை அமைச்சகம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

இதுகுறித்து வெளியுறவு துறை வெளியிட்டுள்ள அறிவிப்பில், தயவுசெய்து எச்சரிக்கையுடன் இருங்கள், ஈரான் நாட்டிற்குள் தேவையற்ற பயணங்களைத் தவிர்க்கவும், பாதுகாப்பு முகாம்களுக்கு அருகில் இருக்கவும் அறிவுறுத்தப்பட்டார்கள். மேலும், தூதரகம் நிலைமையை தீவிரமாகக் கண்காணித்து வருகிறது. இந்தியர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்த இஸ்ரேலிய அதிகாரிகளுடன் தொடர்பில் உள்ளது” என்று தூதரகம் தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.

டெல் அவிவில் உள்ள இந்திய தூதரகம் ஈரானின் பார்வையில் இஸ்ரேலில் உள்ள இந்திய நாட்டினருக்கு ஒரு ஆலோசனையை வழங்கியது. ஏவுகணை தாக்குதல்கள் நடத்தப்பட்டு வரும் நிலையில் இந்திய குடிமக்கள் விழிப்புடன் இருக்கவும், உள்ளூர் அதிகாரிகளின் ஆலோசனைப்படி நெறிமுறைகளை கடைபிடிக்கவும் அறிவுறுத்துகிறது. இந்தியர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய இந்திய தூதரகத்தை தொடர்பு கொள்ளுமாரு ஆலோசனையில் கூறப்பட்டுள்ளது.

தூதரகம் அவசரகால தொடர்பு விவரங்களையும் பகிர்ந்து கொண்டது: +972-547520711, +972-543278392. இந்தியத் தூதரகம் 24 மணி நேர உதவி எண்களையும் பகிர்ந்து கொண்டது நாட்டு மக்கள் அவசர காலங்களில் அழைக்கலாம். மேலும், cons1.telaviv@mea.gov.in– என்ற மின்னஞ்சல் முகவரியையும் பகிர்ந்து கொண்டது, ஈரானுக்கு தக்க பதிலடி கொடுக்கப்படும் என இஸ்ரேல் எச்சரித்துள்ள நிலையில், எப்போது வேண்டுமானாலும் தாக்குதல் நடத்தப்படலாம் என்பதால் இந்தியர்களுக்கு வெளியுறவுத்துறை அமைச்சகம் இந்த எச்சரிக்கையை விடுத்துள்ளது.

Read more; சூறாவளி காற்று எச்சரிக்கை.. மீனவர்கள் இரண்டு நாட்கள் கடலுக்கு செல்ல வேண்டாம்..!! – வானிலை ஆய்வு மையம் அலர்ட்!

English Summary

Is It Safe To Travel To Iran? India Issues Advisory Amid Rising Middle East Tensions

Next Post

15 ஆயிரம் ஊழியர்களை பணி நீக்கம் செய்யும் சாம்சங்..! இந்தியர்களை பாதிக்குமா?

Wed Oct 2 , 2024
Samsung Electronics Co. is laying off workers in Southeast Asia, Australia and New Zealand as part of a plan to reduce global headcount by thousands of jobs, according to people familiar with the situation.

You May Like