fbpx

உடம்பில் ஒட்டுத் துணி இல்லாமல் முதியவர் முன் நின்ற பெண்; அழகில் மயங்கிய முதியவருக்கு நேர்ந்த சோகம்..

கேரள மாநிலம் திருச்சூரில் 60 வயதான வியாபாரி ஒருவர் வசித்து வருகிறார். இவர் கடந்த 4 வருடங்களுக்கு முன் வாட்ஸ் அப் மூலம் இளம் பெண் ஒருவருடன் பழகியுள்ளார். அப்போது அந்த இளம் பெண், தான் எர்ணாகுளத்தில் உள்ள விடுதியில் தங்கி படிப்பதாகவும், கல்லூரி கட்டணம் கட்ட பணம் இல்லை அதனால் ரூ.1000 வேண்டும் என்று கேட்டுள்ளார். இதை நம்பிய முதியவரும் உடனடியாக 1000 ரூபாயை அனுப்பியுள்ளார். இதற்க்கு பின் இருவருக்கும் நெருக்கம் அதிகரித்துள்ளது. ஆனால் இருவரும் நேரில் சந்தித்தது இல்லை. இந்நிலையில், இளம் பெண் அடிக்கடி அந்த முதியவரிடம் பணம் கேட்டு வாங்கியுள்ளார்.

திடீரென ஒரு நாள் வீடியோ காலில் அழைத்த இளம்பெண், உடம்பில் எந்த துணியும் இல்லாமல் நிர்வாணமாக நின்றுள்ளார். சந்தோஷத்தில் பூரித்த முதியவர் நீண்ட நேரமாக வீடியோ காலில் ஜாலியாக பேசியுள்ளார். பின்னர், மறுநாள் இருவரும் பேசிய வீடியோவை காண்பித்து, இந்த வீடியோவை உங்கள் உறவினர்களுக்கு அனுப்பி வைக்காமல் இருக்க கூடுதலாக பணம் வேண்டும் என்று மிரட்டியுள்ளார். இதனால் பதறிப்போன முதியவர், இளம்பெண் கேட்கும் போதெல்லாம் பணம் அனுப்பியுள்ளார். ஒரு கட்டத்தில், தன்னிடம் இருந்த பணம் காலியானதால், மனைவி மற்றும் மாமியாரின் நகைகளை அடகு வைத்து ரூ.2.50 கோடி வரை இளம்பெண்ணுக்கு அனுப்பி உள்ளார்.

இந்நிலையில், இந்த சம்பவம் குறித்து முதியவரின் மகனுக்கு தெரியவந்துள்ளது. இதனால் பெரும் அதிர்ச்சி அடைந்த மகன், தனது தந்தையுடன் சென்று திருச்சூர் மேற்கு காவல்நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார். சம்பவம் குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தியதில், வியாபாரியை மயக்கி பணத்தை வாங்கியது கருநாகப்பள்ளி பகுதியை சேர்ந்த 38 வயதான ஷெமி மற்றும் கொல்லம் பெரிநாடு பகுதியை சேர்ந்த ஷெமியின் கணவன் 32 வயதான சோஜன் போஸ் என்பது தெரியவந்தது. இதையடுத்து, இருவரையும் கைது செய்த போலீசார், முதியவரிடம் இருந்து பறித்த பணத்தில் 82 பவுன் நகைகள் மற்றும் விலையுயர்ந்த கார்களை வாங்கியது தெரியவந்துள்ளது. இதையடுத்து தம்பதியை திருச்சூர் மாவட்ட நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

Read more: இவரால் தான் நதியா சினிமாவை விட்டு விலகினார்! பிரபலம் சொன்ன தகவல்..

English Summary

old-man-was-deceived-by-a-woman-in-video-call

Next Post

12ம் வகுப்பு மாணவியை கர்ப்பமாக்கிய கோயில் பூசாரி..! பல பெண்கள் மற்றும் மாணவிகளுடனும் சில்மிஷம்..! விசாரணையில் வெளிவந்த உண்மை..!

Fri Nov 8 , 2024
temple-priest-had-sexual-relationship-with-many-women

You May Like