fbpx

“சித்தப்பா என்ன பண்ண சொன்னாலும், நீ பண்ணனும்”; பள்ளி மாணவியை உடலுறவு கொள்ளுமாறு வற்புறுத்திய தாய்..

சமீப காலமாக பிள்ளைகளுக்கு பாதுகாப்பாக இருக்க வேண்டிய பெற்றோரே அவர்களுக்கு பாதகம் செய்கிறார்கள். ஆம், தந்தையே மகளை பலாத்காரம் செய்வது, பெற்ற குழந்தையை கள்ளக்காதலுக்காக கொலை செய்வது, சித்ரவதை செய்வது மேலும் சொந்த பிள்ளையை விபச்சாரத்தில் ஈடுபடுத்துவது போன்ற கொடூர செய்திகளை நாம் நாள் கேள்வி படுகிறோம். இது போன்ற செய்திகள், மனிதர்கள் மிருகம் ஆகி விட்டார்களா என்று நினைக்க வைக்கிறது. அந்த வகையில் தற்போது மீண்டும் இது போன்ற கொடூர சம்பவம் நடந்துள்ளது.

ஆம், கரூர் மாவட்டம் குளித்தலை அருகே உள்ளது கரையான்பட்டி. குளித்தலை மகளிர் காவல் துறையின் சார்பாக, பெண்கள் பாலியல் துன்புறுத்தல் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி கரையான்பட்டியில் உள்ள அரசு பள்ளியில்  நடைபெற்றது. அப்போது 15 வயது சிறுமி ஒருவர், கடந்த 5 வருடங்களாக தன்னை சித்தப்பா முறை கொண்ட செல்வம் மற்றும் அவரது 17 வயது மகன் பாலியல் வன்கொடுமை செய்வதாக கூறியுள்ளார். இவரை மட்டும் இல்லாமல், இவரது சகோதரியையும், இவரது சித்தப்பா மற்றும் அவரது மகன் இருவரும் பாலியல் ரீதியாக துன்புறுத்துவதாக கூறியுள்ளார்.

மேலும், தங்களுக்கு நடக்கும் கொடுமைகளை குறித்து தனது தாய் ஜோதிடம் மாணவி கூறிய போது, “சித்தப்பாவும், அண்ணனும் என்ன செய்ய சொன்னாலும் அதை நீ அவுங்களுக்கு பண்ணி விடு” என்று அவர்களின் ஆசைக்கு இணங்குமாறு அறிவுரை கூறியுள்ளார். இதனால் அதிர்ச்சி அடைந்த போலீசார், மாணவியின் சித்தப்பா செல்வம், அவரது 17 வயது மகன் மற்றும் மாணவியின் தாய் ஜோதி ஆகிய மூவரையும் கைது செய்து, தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். பெற்ற தாயே தனது பிள்ளைகளை சீரழித்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

Read more: வேறு கண்ணில் அறுவை சிகிச்சை.. அலட்சியமா பதில் சொன்ன மருத்துவர்..!! 7 வயது சிறுவனுக்கு நேர்ந்த கொடூரம்..

English Summary

mother-compelled-her-daughter-to-have-sex

Next Post

கல்லூரி பேராசிரியர் செய்த கேவலமான செயல்; பாத்ரூமில் மாணவி செய்த காரியத்தால் ஏற்பட்ட திருப்பம்..

Thu Nov 14 , 2024
college-professor-tried-to-sexually-abuse-his-student

You May Like