fbpx

சபரிமலை தரிசனம்.. பக்தர்கள் சென்ற பேருந்து கவிழ்ந்து விபத்து.. 28 பேர் காயம்..!!

கேரளாவின் வயநாட்டில் உள்ள திருநெல்லி அருகே செவ்வாய்க்கிழமை அதிகாலை சபரிமலை கோயிலில் இருந்து பக்தர்களை ஏற்றிச் சென்ற பேருந்து கவிழ்ந்ததில் 28 பயணிகள் காயம் அடைந்ததாக போலீஸார் தெரிவித்தனர். அந்த பஸ்சில் இரண்டு குழந்தைகள் உட்பட கர்நாடகாவை சேர்ந்த 45 பேர் பயணித்துள்ளனர்.

சபரிமலை கோயிலுக்குச் சென்றுவிட்டு மைசூரில் உள்ள ஹுன்சூருக்கு பேருந்து திரும்பிக் கொண்டிருந்தது. காலை 6 மணியளவில் இந்த விபத்து நடந்துள்ளது. விபத்து நடந்த உடனேயே, காயமடைந்தவர்கள் உடனடியாக வயநாட்டில் உள்ள மானந்தவாடி மருத்துவக் கல்லூரியில் அனுமதிக்கப்பட்டனர். உயிர் இழப்புகள் ஏதும் ஏற்படவில்லை என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

காங்கிரஸ் தலைவரும், வயநாடு மக்களவைத் தொகுதியின் வேட்பாளருமான பிரியங்கா காந்தி, இந்தச் சம்பவம் குறித்து “கர்நாடகாவைச் சேர்ந்த சபரிமலை யாத்ரீகர்கள் வயநாட்டில் துரதிர்ஷ்டவசமாக பேருந்து விபத்துக்குள்ளான செய்தியை கேட்டு நான் மிகவும் வருத்தமடைந்தேன். காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய பிராத்திக்கிறேன்” என்றார்.

வெள்ளிக்கிழமை பிற்பகல், கேரளாவின் சபரிமலை கோயிலில் வருடாந்திர மண்டலம்-மகரவிளக்கு யாத்திரை சீசன் தொடங்கியது. முன்னதாக, காவல்துறையின் தலைமை ஒருங்கிணைப்பாளர் ஏடிஜிபி எஸ்.ஸ்ரீஜித் திருவிழாவையொட்டி போலீஸார் செய்துள்ள ஏற்பாடுகள் குறித்துப் பேசினார். பக்தர்களின் எண்ணிக்கை ஒரு லட்சத்தை எட்டினாலும், நிலைமையை சமாளிக்க போலீசார் முழுமையாக தயாராக உள்ளனர்,” என்றார்.

Read more ; முன்னாள் படைவீரர்கள் ரூ.1000 செலுத்தி ஆவின் பாலகம் அமைக்கலாம்…!

English Summary

Kerala: 27 injured after bus carrying Sabrimala devotees overturns in Wayanad

Next Post

எச்சரிக்கை!!! இனி யாருக்கும் லிப்ட் கொடுக்க வேண்டாம்... கோவையை அதிர வைத்த சம்பவம்..

Tue Nov 19 , 2024
young-man-was-caught-in-trouble-by-the-man-who-asked-for-lift

You May Like