fbpx

போட்டி தேர்வு… ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின இன மாணவர்களுக்கு பயிற்சி வகுப்பு…!

தமிழ்நாடு ஆதிதிராவிடர் வீட்டு வசதி மற்றும் மேம்பாட்டுக்கழகம் (தாட்கோ) ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் சார்ந்தவர்களுக்கு, பட்டய கணக்காளர்- இடைநிலை (Chartered Accountant- Intermediate), நிறுவன செயலாளர்- இடைநிலை (Company Secretary-Intermediate), செலவு மற்றும் மேலாண்மை கணக்காளர்- இடைநிலை (Cost and Management Accountant- Intermediate) ஆகிய போட்டி தேர்வில் தேர்ச்சி பெற தாட்கோவில் பயிற்சி அளிக்கப்படவுள்ளது.

தாட்கோவின் முன்னெடுப்பாக சென்னையில் உள்ள முன்னணி பயிற்சி நிறுவனத்துடன் இணைந்து 100 ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின மாணக்கர்களுக்கு பட்டய கணக்காளர்- இடைநிலை (Chartered Accountant- Intermediate), நிறுவன செயலாளர்- இடைநிலை (Company Secretary- Intermediate), @ மேலாண்மை கணக்காளர்-இடைநிலை (Cost and Management Accountant-Intermediate) ஆகிய போட்டித்தேர்வில் தேர்ச்சி பெற பயிற்சி அளிக்கப்பட உள்ளது.

இதற்கான தகுதிகள் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் இனத்தை சார்ந்தவராக இருக்க வேண்டும் இப்பயிற்சி பெறவிரும்பும் மாணக்கர்கள் இளநிலை வணிகவியல் பட்டம் பெற்றிருக்க வேண்டும் அவர்களின் குடும்ப ஆண்டு வருமானம் ரூ.3.00 இலட்சத்திற்குள் இருக்க வேண்டும். ஒரு வருட பயிற்சிக்கு தேர்வு செய்யப்படும் மாணக்கர்களுக்கு தங்கும் வசதி மற்றும் உணவு வசதிகள் தாட்கோ மூலம் ஏற்பாடு செய்யப்படும். தகுதியுள்ள மாணாக்கர்கள் இப்பயிற்சி நிறுவனத்தில் சேர்வதற்கு தாட்கோ www.tahdco.com என்ற இணையதளத்தல முகவரியில் பதிவு செய்து கொள்ளலாம். எனவே ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின இனத்தைச் சார்ந்தவர்கள் தாட்கோவில் விண்ணப்பம் செய்து பயன்பெறலாம் ‌.

English Summary

Training course for Adi Dravidian and tribal students through TADCO

Vignesh

Next Post

ஒரு நாளைக்கு 10,000 ஸ்டெப்ஸ் நடப்பது உடற்பயிற்சிக்கு மாற்றாகுமா? - நிபுணர்கள் விளக்கம்

Sun Dec 15 , 2024
Know whether walking 10,000 steps a day can replace a traditional workout. Learn insights from experts on the benefits and limitations of this popular fitness goal.
walking

You May Like