fbpx

ஆசிரியர்களுக்கு ஜனவரி 6 முதல் 9-ம் தேதி வரை எண்ணும் எழுத்தும் பயிற்சி…! பள்ளி கல்வித்துறை உத்தரவு…!

ஆசிரியர்களுக்கு ஒன்றியளவிலான எண்ணும் எழுத்தும் பயிற்சி ஜனவரி 6 முதல் 9-ம் தேதி வரை நடத்த அறிவுறுத்தப்பட்டுள்ளது.

தமிழகத்தில் அரசுப் பள்ளிகளில் 1 முதல் 5-ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு எண்ணும் எழுத்தும் திட்டத்தின் வாயிலாக கற்பித்தல் பணி மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அந்தவகையில் ஆசிரியர்களுக்கு ஒன்றியளவிலான எண்ணும் எழுத்தும் பயிற்சி ஜனவரி 6 முதல் 9-ம் தேதி வரை வழங்கப்பட வேண்டுமென அறிவுறுத்தப்பட்டது. இதற்கிடையே கடலூர், விழுப்புரம் மற்றும் திருவண்ணாமலை ஆகிய மாவட்டங்களில் 2-ம் பருவத் தேர்வு ஜனவரி 6 முதல் 10-ம் தேதி வரை நடத்தப்பட உள்ளது.

எனவே, இந்த 3 மாவட்டங்களில் மட்டும் தொடக்கப் பள்ளி ஆசிரியர்களுக்கு ஒன்றிய அளவிலான எண்ணும் எழுத்தும் பயிற்சி ஜனவரி 21 முதல் 24-ம் தேதி வரை நடத்தப்பட வேண்டும். அதன்படி 1 முதல் 3-ம் வகுப்புகளுக்கு ஜனவரி 21, 22-ம் தேதிகளிலும், 4, 5-ம் வகுப்புக்கு ஜனவரி 23, 24-ம் தேதிகளிலும் பயிற்சிகள் நடைபெற வேண்டும். எண்ணும் எழுத்தும் பாடப்பொருள் கற்பிப்பது சார்ந்து எழும் சந்தேகங்களை தீர்க்கும் வகையில் பயிற்சி வழங்கப்பட வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

English Summary

Teachers have been instructed to provide unit-wide numeracy and literacy training from January 6th to 9th.

Vignesh

Next Post

கவனம்...! 55 கி.மீ வேகத்தில் காற்று வீசக்கூடும்.. மீனவர்கள் யாரும் கடலுக்கு செல்ல வேண்டாம்...! வானிலை மையம் எச்சரிக்கை

Mon Dec 23 , 2024
Winds may gust to 55 kmph. Fishermen should not venture into the sea.
’நெருங்கும் புயல்’..!! என்ன செய்ய வேண்டும்..? என்ன செய்யக்கூடாது..? அவசியம் தெரிந்து கொள்ளுங்கள்..!!

You May Like