இந்திய அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரர் வினோத் காம்ப்லியின் உடல்நிலை திடீரென மோசமடைந்ததால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். காம்ப்ளிக்கு சிறுநீர் கழிப்பதில் பிரச்சனை இருப்பதாக மருத்துவ அறிக்கை கூறுகிறது. வினோத் காம்ப்லி யூடியூப் சேனல் ஒன்றில் அளித்த பேட்டியில், தான் சிறுநீர் தொற்று நோயால் அவதிப்படுவதாகவும், இதனால் அடிக்கடி மயங்கி விழுந்ததாகவும் கூறியுள்ளார். இந்த நோயின் அறிகுறிகள் என்னென்ன.. அதற்கான காரணம் குறித்து இந்த பதிவில் பார்க்கலா.
அறிகுறிகள் மற்றும் காரணம் :
நீரிழிவு நோய் : டைப் 1 மற்றும் டைப் 2 நீரிழிவு நோய்களில் அடிக்கடி சிறுநீர் கழித்தல் ஏற்படலாம், ஏனெனில் உயர் இரத்த சர்க்கரை அளவு சிறுநீரகங்களின் செயல்பாட்டை பாதிக்கிறது, இது அடிக்கடி சிறுநீர் கழிக்க வழிவகுக்கும்.
சிறுநீர் பாதை நோய்த்தொற்றுகள் (UTIs) : சிறுநீர்ப்பை அல்லது சிறுநீர்க்குழாயை பாதிக்கும் பாக்டீரியா தொற்றுகள் அடிக்கடி சிறுநீர் கழிக்க வழிவகுக்கிறது. சிறுநீர் கழிப்பதோடு, வலி, எரிச்சலை ஏற்படுத்துகிறது.
விரிவாக்கப்பட்ட புரோஸ்டேட் : ஆண்களில், தீங்கற்ற புரோஸ்டேடிக் ஹைப்பர் பிளாசியா (பிபிஹெச்) சிறுநீர் அமைப்பில் அழுத்தத்தை ஏற்படுத்துகிறது. இதனால் அடிக்கடி சிறுநீர் சிறுநீர் கழிக்க வழிவகுக்கும்.
கர்ப்பம்: ஹார்மோன் மாற்றங்கள் மற்றும் வளர்ந்து வரும் கருப்பை சிறுநீர்ப்பையில் அழுத்தத்தை ஏற்படுத்துகிறது, இதனால் அடிக்கடி சிறுநீர் கழிக்கிறது.
எவ்வாறு பாதுகாத்துக் கொள்வது? நீங்கள் சிறுநீர் தொற்று பிரச்சனையை தவிர்க்க விரும்பினால், நிறைய தண்ணீர் குடிப்பது சிறந்த வழி. தேங்காய் தண்ணீர் உடலில் உள்ள எலக்ட்ரோலைட்டுகளை குறைக்க விடாது. உங்கள் உணவை மேம்படுத்தவும் மற்றும் காஃபின், ஆல்கஹால் மற்றும் காரமான உணவுகளை தவிர்க்கவும்.
Read more ; கடன் வசூலிக்க நியாயமற்ற நடைமுறைகளை கையாண்டால் 10 ஆண்டுகள் சிறை.!! – மத்திய அரசு