fbpx

விவசாயிகளிடம் மாவட்ட அளவில் தான் கரும்பு கொள்முதல் செய்ய வேண்டும்…! தமிழக அரசு அதிரடி உத்தரவு…!

மாவட்ட அளவில் கரும்பு விவசாயிகளிடம் இருந்து நேரடியாக பொங்கல் கரும்பு கொள்முதல் செய்ய தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

இது குறித்து அனைத்து மண்டல இணை பதிவாளர்கள், சென்னை மண்டல கூடுதல் பதிவாளருக்கு கூட்டுறவு சங்கங்களின் பதிவாளர் அனுப்பியுள்ள சுற்றறிக்கையில்; 2025 தைப்பொங்கல் பண்டிகையை முன்னிட்டு 2.21 கோடி அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கும், இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாம்களில் வசிக்கும் குடும்பங்களுக்கும் பொங்கல் பரிசு தொகுப்பு வழங்க அரசு உத்தரவிட்டு, ரூ.249.75 கோடி ஒதுக்கியுள்ளது. பரிசு தொகுப்பை ரேஷன் கடைகள் மூலம் வழங்குவது தொடர்பாக அரசாணைகளில் கூறப்பட்டுள்ள அறிவுரைகளை தவறாமல் பின்பற்ற வேண்டும். அனைத்து ரேஷன் கடைகளுக்கும் பரிசு தொகுப்புகள் சென்றடைவதை உறுதிசெய்ய வேண்டும்.

பரிசு தொகுப்பு விநியோக அட்டவணை விவரத்தை காவல் துறைக்கு முன்கூட்டியே தெரிவித்து, ரேஷன் கடைகளுக்கு உரிய போலீஸ் பாதுகாப்பு அளிக்கப்பட வேண்டும். எந்தவித புகாருக்கும் இடமின்றி பரிசு தொகுப்பை விநியோகம் செய்ய வேண்டும். மாவட்ட அளவில் கரும்பு விவசாயிகளிடம் இருந்து நேரடியாக கரும்பு கொள்முதல் செய்ய, மாவட்ட ஆட்சியர் தலைமையிலும், சென்னையில் மண்டல கூடுதல் பதிவாளர் தலைமையிலும் குழு அமைக்கப்பட்டுள்ளது.

English Summary

Sugarcane should be purchased from farmers at the district level only.

Vignesh

Next Post

குட் நியூஸ்!. வருமான வரி தாக்கல் செய்ய ஜன.15வரை அவகாசம் நீட்டிப்பு!. மத்திய நிதி அமைச்சகம் அறிவிப்பு!

Wed Jan 1 , 2025
Extension of time till January 15 to file income tax! Union Ministry of Finance Announcement!

You May Like