fbpx

ஆதிதிராவிடர்களுக்கு ரூ.3.50 லட்சம் மானியத்துடன் கூடிய வங்கி கடன்..‌! விண்ணப்பிக்கலாம் என அறிவிப்பு…!

ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் சமூக பொருளாதார மேம்பாட்டிற்கான தொழில் முனைவுத் (CM-ARISE) திட்டத்தின் கீழ் திட்ட மதிப்புத் தொகையில் 35% அல்லது ரூ.3.50 இலட்சம் இவற்றில் எது குறைவானதோ அத்தொகை மானியத்துடன் கூடிய வங்கிக்கடனுடன் வழங்கப்படும். இத்திட்டத்தில் தவனைத் தொகையினை தவறாமல் திரும்ப செலுத்தும் பயனாளிகளுக்கு மேலும் 6% சதவீத வட்டி மானியம் வழங்கப்படும் என தருமபுரி மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார் ‌

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில்; முதலமைச்சரின் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் சமூக பொருளாதார மேம்பாட்டிற்கான தொழில் முனைவுத் (CM-ARISE) திட்டத்தின் கீழ் திட்ட மதிப்புத் தொகையில் 35% அல்லது ரூ.3.50 இலட்சம் இவற்றில் எது குறைவானதோ அத்தொகை மானியத்துடன் கூடிய வங்கிக்கடனுடன் வழங்கப்படும். இத்திட்டத்தில் தவனைத் தொகையினை தவறாமல் திரும்ப செலுத்தும் பயனாளிகளுக்கு மேலும் 6% சதவீத வட்டி மானியம் வழங்கப்படும்.

புதிரை வண்ணார் சமூகத்தினர் மேற்கண்ட திட்டத்தின் கீழ் தாட்கோ இணையதள முகவரியில் (http://newscheme.tahdco.com) தொழில் முனைவோர்களாக விருப்பமுள்ளவர்கள் விண்ணப்பம் செய்து பயன் பெறலாம். மேலும் விபரங்களுக்கு தாட்கோ மாவட்ட மேலாளர் அலுவலகத்தை அணுகி விவரம் பெற்று உரிய ஆவணங்களுடன் பதிவேற்றம் செய்து இவ்வாய்ப்பினை பயன்படுத்திக் கொள்ளலாம் என தருமபுரி மாவட்ட ஆட்சித்தலைவர் தெரிவித்துள்ளார்.

English Summary

Bank loan with subsidy of Rs. 3.50 lakhs for Adi Dravidians.

Vignesh

Next Post

குழந்தைகளில் ஆஸ்துமாவை விரைவில் கண்டறிய புதிய நாசி ஸ்வாப் சோதனை!. ஆராய்ச்சியாளர்கள் அசத்தல் கண்டுபிடிப்பு!.

Wed Jan 15 , 2025
New nasal swab test to detect asthma in children early!. Researchers make an amazing discovery!.

You May Like