fbpx

குட் நியூஸ்: ரமலான் மாதத்தில் நோன்பு கடைபிடிக்கும் முஸ்லிம்களுக்கு… முதல்வர் ஸ்டாலின் உத்தரவு…!

புனித ரமலான் மாதத்தில் நோன்பு கடைபிடிக்கும் முஸ்லிம்களுக்கு நோன்புக் கஞ்சித் தயாரிக்க பள்ளிவாசல்களுக்கு பச்சரிசி வழங்க முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.

ஒவ்வொரு ஆண்டும் புனித ரமலான் மாதத்தில் நோன்பு கடைபிடிக்கும் முஸ்லிம் மக்களுக்கு நோன்புக் கஞ்சி தயாரித்து வழங்கும் பொருட்டு, பள்ளிவாசல்களுக்கு பச்சரிசி, தமிழக அரசால் வழங்கப்பட்டு வருகிறது. கடந்த ஆண்டுகளைப் போலவே, 2025-ம் ஆண்டிலும் ரமலான் மாதத்தில் நோன்புக் கஞ்சி தயாரிக்க பள்ளிவாசல்களுக்கு அரிசி வழங்க வேண்டும் என்று முஸ்லிம் மக்களிடமிருந்து கோரிக்கைகள் வந்துள்ளன.

2025 -ம் ஆண்டு, ரமலான் மாதத்தில் நோன்பு கடைபிடிக்கும் முஸ்லிம் மக்களுக்கு நோன்பு கஞ்சி தயாரிப்பதற்கு ஏதுவாக பள்ளிவாசல்களுக்கு மொத்த அனுமதியின் கீழ் நோன்பு கடைபிடிக்கப்படும் நாட்களுக்கு மட்டும் பச்சரிசி வழங்கிட தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.

பள்ளிவாசல்களுக்குத் தேவைப்படும் அரிசிக்கான மொத்த அனுமதியை வழங்க மாவட்ட ஆட்சித் தலைவர்களுக்குத் தக்க அறிவுரைகள் வழங்கப்பட்டுள்ளன. இதன்படி, 7,920 மெட்ரிக் டன் அரிசி மொத்த அனுமதி மூலம் பள்ளிவாசல்களுக்கு வழங்கப்படும். இதனால், அரசுக்கு 18 கோடியே 41 லட்சத்து 40 ஆயிரம் ரூபாய் கூடுதல் செலவினம் ஏற்படும் என தமிழக அரசு தெரிவித்துள்ளது.

English Summary

Chief Minister Stalin’s order to Muslims observing fast during the month of Ramadan

Vignesh

Next Post

வெறும் வயிற்றில் தண்ணீர் குடித்தால் உடலில் இந்த மாற்றங்கள் நிகழுமா..? மருத்துவர்கள் சொல்வது என்ன..?

Wed Feb 26 , 2025
Drinking water on an empty stomach as soon as you wake up in the morning will improve your digestive system.

You May Like