கேரளா மாநிலம் கன்னூரைச் சேர்ந்த ஸ்ரீநந்தா என்னும் 18 வயதான இளம்பெண் தனியார் கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்து வந்திருக்கிறார். உடல் பருமன் அடைந்ததால் கவலை அடைந்த அந்த பெண், 6 மாதமாக வாட்டர் டயட் எனப்படும் தண்ணீரை மட்டுமே உணவாக எடுத்து வந்திருக்கிறார். மேலும் கடுமையான உடற்பயிற்சியையும் செய்து வந்துள்ளார்.
இதனால் உடல் பலவீனம் அடைந்த அந்த பெண், கடந்த 2 மாதங்களுக்கு முன் உடல் நலம் பாதிக்கப்பட்டு கோழிக்கோடு அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு அங்கு மருத்துவர்களின் அறிவுரையின்படி மருத்துவ மற்றும் மன நல சிகிச்சை அளிக்கப்பட்டு வந்திருக்கிறது. இந்த நிலையில் கடந்த சில வாரங்களுக்கு பின் அவரது உடலில் ரத்த சக்கரையின் அளவு தொடர்ச்சியாக குறைந்து மூச்சு விடவே சிரமப்பட்டிருக்கிறார்.
பின்னர் அவரை அங்கிருந்து தலச்சேரி மருத்துவமனைக்கு கொண்டு சென்று ஐசியூவில் வைத்து சிகிச்சை அளித்திருக்கின்றனர். அவர் அங்கு 24 கிலோவுக்கும் குறைவான எடையில் இருந்துள்ளார். அவரது உடலில் சர்க்கரையின் அளவு, சோடியத்தின் அளவும் குறைந்திருக்கிறது. மேலும் ரத்த அழுத்தமும் மிகவும் குறைந்திருக்கிறது. அவரது உணவு குழல் சுருங்கி மிகவும் ஆபத்தான நிலையில் இருந்திருக்கிறார். இதனையடுத்து அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். டயட் காரணமாக இளம் பெண் உயிரிழந்திருப்பது அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியிருக்கிறது.
Read more:கை குலுக்க வந்த ரசிகரை கன்னத்தில் அறைந்த பிரபல நடிகை..!