இன்றைய நாளில், திரைத்துறையில் சாதித்து இருக்கும் பல முன்னணி நடிகர்களின் வாழ்கையை திரும்பி பார்த்தால், பல சோகங்களும் மோசமான அனுபவங்களும் அதிகம் இருந்திருக்கும். அவர்கள் பட்ட கஷ்டங்களும், அவமானங்களுமே அவர்களை கலைஞர்களாக மாற்றியது என்று கூட சொல்லலாம். சாதாரண குடும்பத்தில் பிறந்து, சாப்பிடுவதற்கு கூட கஷ்டப்பட்ட பலரை சினிமா துறை கோடீஸ்வரராக மாற்றியுள்ளது என்பது மறுக்க முடியாத உண்மை.
அந்த வகையில், வாழ்க்கையே தோல்வியான நிலையில், சோர்ந்து போய் இருந்த நடிகை ஒருவரின் தற்போதைய நிலை பலரின் கவனத்தை ஈர்த்துள்ளது. ஆம், அந்த நடிகை முதலில் சின்னத்திரையில், மெகா சீரியல்களில் நடித்து வந்தார். அவர் தனது எதார்த்தமான நடிப்பால் ரசிகர்களின் மனதை வென்றார். மற்ற நடிகைகளை போல் இல்லாமல், இவர் தனது இளம் வயதிலேயே திருமணம் செய்து கொண்டார்.
ஒரு சில ஆண்டுகளில், அவருக்கு அழகான பெண் குழந்தை ஒன்றும் பிறந்தது. ஆனால் அதற்கு பின், அவருக்கும் அவரது கணவருக்கும் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக இவர் பல துன்பங்களை சந்திக்க நேரிட்டது. இதனால், ஒரு கட்டத்தில், இவர் விவாகரத்தை பெற்றார். நாடு முழுவதும் சின்னத்திரை ரசிகர்களால் அறியப்பட்ட பிரபல நடிகை தான் ஸ்வேதா திவாரி.
ஆம், இவரது வாழ்க்கை தான், திருமனத்திற்கு பிறகு சுக்குநூறாக உடைந்தது. இந்நிலையில், 2000 ஆம் ஆண்டின் போது இவர் நடித்த தொடரான “கஸ்டடி ஜிந்தகி கே” மிகப்பெரிய வெற்றி பெற்றது. இந்த சீரியல், இந்தி வட்டாரத்தில் ஒளிபரப்பாகும் போது அதன் டிஆர்பி ரேட்டிங் தான் முன்னிலையில் இருந்தது. இந்த தொடரின் ஆரம்பத்தில், ஸ்வேதா திவாரி ரூ. 5000 சம்பளம் தான் பெற்றார்.
ஆனால் அந்த தொடரின் இறுதியில், அவரது சம்பளம் நாள் ஒன்றுக்கு ரூ. 2.25 லட்சமாக மாறியுள்ளது. இந்தியாவிலேயே மிக அதிகமாக சம்பளம் பெற்ற சின்னத்திரை நடிகை என்ற புகழ், இவருக்கே சொந்தமானது. இதையடுத்து, இந்தி பிக்பாஸ் சீசன் 4 ல் பங்குபெற்ற இவர், வின்னராகவும் தேர்வானார். அது மட்டும் இல்லாமல், பல்வேறு ரியாலிட்டி ஷோக்களிலும் இவர் பங்குபெற்றுள்ளார்.
தனது 18 வயதில், தன்னை விட 5 வயது அதிகமான இயக்குனர் ராஜா சவுத்ரி என்பவரை, தனது குடும்பத்தினரின் எதிர்ப்பை மீறி ஸ்வேதா திவாரி திருமணம் செய்து கொண்டார். இவர்களின் மகளான பாலக் திவாரியும், நடிகையாக வளம் வருகிறார். ஆனால் ராஜா சவுத்ரி உடனான வாழ்க்கை, ஸ்வேதாவுக்கு கஷ்டத்தை தான் கொடுத்தது.
தினமும் குடித்து விட்டு வீட்டிற்க்கு வரும் ராஜா சவுத்ரி தனது மனைவியை அடித்து துன்புறுத்தியுள்ளார். இதனால் 5 ஆண்டுகள் போராட்டத்திற்கு பிறகு, இவர் விவகாரத்தை பெற்றார். ஆனால், தனது மகள் தன்னிடம் இருக்க வேண்டும் என்றால், அதற்கு பெரிய இழப்பீட்டை கணவருக்கு கொடுக்க வேண்டும் என்று வழக்கின் போது முடிவு செய்யப்பட்டது.
இதனால் அவர், மும்பையில் தனக்கு சொந்தமான வீடு ஒன்றை தனது கணவருக்கு கொடுத்துவிட்டு மகளை மீட்டு எடுத்தார். இன்றைக்கு ஸ்வேதா திவாரியின் சொத்து மதிப்பு ரூ. 100 கோடி வரை இருக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது.
Read more: கை குலுக்க வந்த ரசிகரை கன்னத்தில் அறைந்த பிரபல நடிகை..!