fbpx

சூப்பர் வாய்ப்பு..! இன்று முதல் 9-ம் தேதி வரை ஏற்றுமதி வாய்ப்பு பற்றி தமிழக அரசு பயிற்சி…!

ஏற்றுமதி வாய்ப்பு அடையாளம் காணும் பயிற்சி இன்று முதல் 9ம் தேதி வரை நடைபெறும் என தமிழக அரசு அறிவித்துள்ளது.

தமிழக அரசின் தொழில் முனைவோர் மேம்பாடு மற்றும் புத்தாக்க நிறுவனத்தின் மூன்று நாள் ஏற்றுமதி வாய்ப்பு அடையாளம் காணும் பயிற்சி பயிற்சி வரும் இன்று முதல் 09.05.2025 வரை காலை 10 மணி முதல் மாலை 5.00 மணி நடைபெற உள்ளது. பயிற்சி EDII-TN வளாகத்தில் நடைபெற உள்ளது. இந்த பயிற்சி, பங்கேற்பாளர்களுக்கு சர்வதேச வர்த்தக வாய்ப்புகளை ஆராய்ந்து பயன்படுத்துவதற்கான முக்கிய தகவல்கள், நடைமுறைகள் மற்றும் திறன்களை வழங்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.

இந்த பயிற்சியின் முடிவில், பங்கேற்பாளர்கள் கீழ்காணும் திறன்களை நிபுணத்துவம் பெற முடியும். ஏற்றுமதி செயல்முறைகள், தேவையான ஆவணங்கள் மற்றும் விதிமுறைகளை புரிந்து கொள்ளமுடியும். தரவுகளையும் வர்த்தக பகுப்பாய்வுகளையும் பயன்படுத்தி சாத்தியமான ஏற்றுமதி சந்தைகளை அடையாளம் காண்தல் மற்றும் மதிப்பீடு செய்தல். தமிழ்நாடு மையமாகக் கொண்ட நிறுவனங்களுக்கு பொருத்தமான துறை சார்ந்த ஏற்றுமதி வாய்ப்புகள், எதிர்கொள்ள வேண்டிய சவால்கள் மற்றும் அரசின் மானிய திட்டங்களை அறியலாம்.

தங்களது வணிகத் தேவைகளுக்கு ஏற்ற வகையில் ஏற்றுமதி தயார்நிலைச் (checklist) உருவாக்குதல். சர்வதேச சந்தைகளில் நுழைய அல்லது விரிவடைய நடைமுறைசார்ந்த ஏற்றுமதி திட்டங்களை உருவாக்கல். இப்பயிற்சி பற்றிய கூடுதல் விவரங்களை பெற விரும்புவோர் www.editn.in என்ற வலைத்தளத்தில் தெரிந்து கொள்ளலாம். தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி மற்றும் தொலைபேசி /கைபேசி எண்கள் கொடுக்கப்பட்டுள்ளது: 9360221280 / 9543773337, இடம்: EDII-TN வளாகம். ஈக்காட்டுத்தாங்கல், கிண்டி, சென்னை 600 032. அரசு சான்றிதழ் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Read More: Read More: பெரும் சோகம்..! 3 இந்தியர்கள் பலி!. பாகிஸ்தான் ராணுவம் கண்மூடித்தனமான தாக்குதல்…!

English Summary

Tamil Nadu government training on export opportunities from today to the 9th.

Vignesh

Next Post

ஷாக்..! வரும் 11-ம் தேதி மதுக்கடைகளுக்கு விடுமுறை...! செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் உத்தரவு..!

Wed May 7 , 2025
Holiday for liquor shops on the 11th...! Chengalpattu District Collector orders

You May Like