10 வயது சிறுமியை, வாயை மூடி கடத்திச் சென்று பாலியல் வன்கொடுமை..! அ.மலை வெளியிட்ட வீடியோ பதிவு

a Malai 2025

திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி அருகே, கடந்த சனிக்கிழமை அன்று, சாலையில் நடந்து சென்ற பத்து வயது சிறுமியை, வாயை மூடிக் கடத்திச் சென்று பாலியல் வன்கொடுமை செய்த நபரை ஏன் இன்னும் கைது செய்யவில்லை என பாஜக முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலை கேள்வி எழுப்பி உள்ளார்.


இது குறித்து அவர் தனது எக்ஸ் தளத்தில்; திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி அருகே, கடந்த சனிக்கிழமை அன்று, சாலையில் நடந்து சென்ற பத்து வயது சிறுமியை, வாயை மூடிக் கடத்திச் சென்று பாலியல் வன்கொடுமை செய்த சிசிடிவி காட்சி, நெஞ்சைப் பதைபதைக்க வைக்கிறது. குற்றம் நடந்து ஐந்து நாட்கள் கடந்தும், இன்னும் குற்றவாளி கைது செய்யப்படவில்லை என்பது மிகவும் வருத்தமளிக்கிறது. சிறுமி என்றும் பாராமல், பாலியல் குற்றங்களில் ஈடுபடும் இது போன்ற குற்றவாளிகள் வெளியில் சுதந்திரமாக உலவுகிறார்கள் என்பதே சமுதாயம் எத்தனை ஆபத்தான சூழலில் இருக்கிறது என்பதைக் காட்டுகிறது.

இத்தனை தைரியமாக, சாலையில் நடந்து செல்லும் சிறுமியிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபடும் குற்றவாளி, இதற்கு முன்பாக எத்தனை முறை பாலியல் குற்றங்களில் ஈடுபட்டிருப்பான் என்ற கேள்வி எழுவதோடு மட்டுமல்லாமல், இன்னும் கைது செய்யப்படாமல் இருப்பது, மேலும் குற்றங்களில் அவன் ஈடுபடவும் வாய்ப்பு இருக்கிறது. காவல்துறை இனியும் தாமதிக்காமல், உடனடியாக இந்தக் குற்றவாளியைக் கைது செய்யும் நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என வலியுறுத்தி உள்ளார்.

Read more: பிறக்கும் குழந்தைகள் வெள்ளையாக இருந்தால் மரண தண்டனை.. வினோத வழக்கம் கொண்ட பழங்குடி மக்கள்..!!

Vignesh

Next Post

இந்திய தம்பதிகளில் 4ல் 1 தம்பதியினர் உடல் பருமன் பிரச்சனையை எதிர்கொள்கின்றனர்!. ஐ.சி.எம்.ஆர் ஆய்வில் அதிர்ச்சி!

Thu Jul 17 , 2025
இந்திய திருமணமான 4 தம்பதிகளில் 1 தம்பதியினர் அதிக எடை அல்லது பருமனாக இருப்பதாகவும், அவர்களது வாழ்க்கை பழக்கவழக்கங்களால் இந்த பாதிப்பு ஏற்படுவதாகவும் ஐசிஎம்ஆர் ஆய்வில் அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. திருமணமான ஜோடிகள் ஒரே வீட்டில் வாழும்போது, அவர்களின் பழக்கவழக்கங்கள் ஒருவருக்கொருவர் பாதிக்கப்படும் வாய்ப்பு அதிகமாக இருக்கும். அதிகமாக உணவு அருந்துவது (binge eating), தொடர்ந்து தீங்கு விளைவிக்கும் தகவல்களை நெட்டில் பார்க்கும் பழக்கம் (doomscrolling), கடைசிநேரத்தில் பணிகளை பூர்த்தி […]
obesity couples 11zon

You May Like