அரசு பேருந்து வீட்டின் மீது மோதி விளையாடிக் கொண்டிருந்த 3 வயது சிறுமி பலி…! ரூ. 20 லட்சம் இழப்பீடு வழங்க நயினார் கோரிக்கை…!

bus accident 2025

தருமபுரி மாவட்டம் உழவன் கொட்டாய் அருகே கட்டுப்பாட்டை இழந்த காலாவதியான அரசுப் பேருந்து சாலையோரம் இருந்த வீட்டின் மீது மோதியதில், விளையாடிக் கொண்டிருந்த 3 வயது சிறுமி பரிதாபமாக உயிரிழந்தார். மேலும் 2 பேர் படுகாயமடைந்தனர். இந்த சம்பவம் அப்பகுதி மக்கள் இடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இதற்கு பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் இரங்கல் தெரிவித்துள்ளார்.


பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் அறிக்கை:

தருமபுரி மாவட்டம் உழவன் கொட்டாய் அருகே கட்டுப்பாட்டை இழந்த காலாவதியான அரசுப் பேருந்து சாலையோரம் இருந்த வீட்டின் மீது மோதியதில், அங்கே விளையாடிக் கொண்டிருந்த 3 வயது சிறுமி பரிதாபமாக பலியானதாகவும் மேலும் 2 பேர் படுகாயமடைந்ததாகவும் வெளியாகியுள்ள செய்தி நெஞ்சை கனக்க வைக்கிறது. மகளை இழந்து வாடும் தாயாருக்கும் குடும்பத்தாருக்கும் எனது ஆழ்ந்த இரங்கல்களையும் அனுதாபங்களையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

மழை வந்தால் ஒழுகுவதும், காற்றடித்தால் உடைந்து பறப்பதும், வேகத்தடை மீது ஏறி இறங்கினால் படிக்கட்டுகள் கழன்று விழுவதும் தான் திமுக ஆட்சியில் அரசு பேருந்துகளின் அவல நிலை என்பதையும், இத்தகைய பேருந்துகள் பொது மக்களுக்கு பெரும் ஆபத்தானவை என்பதையும் நாம் பல முறை எடுத்துக் கூறியுள்ளோம். இப்படிப்பட்ட ஓட்டை உடைசல் பேருந்துகளை ஓட்டுநர்களால் எப்படிக் கட்டுப்படுத்த முடியும்? ஆளும் அரசு மக்கள் பாதுகாப்பைத் தொடர்ந்து அலட்சியப்படுத்தியதன் விளைவு தான் இன்று ஒரு பிஞ்சு உயிர் அநியாயமாகப் பறிபோயிருக்கிறது. ஆயிரம் ஆறுதல் சொன்னாலும் தனது மகளைப் பறிகொடுத்து வாடும் அந்த அன்னையின் இழப்பை ஈடு கட்ட முடியுமா?

எனவே, இந்தக் கோர விபத்திற்கு திறனற்ற திமுக அரசு தான் முழு பொறுப்பேற்க வேண்டும். ஓட்டுநரின் மீது பழியைப் போட்டு மக்களை மடைமாற்றுவதை விட்டுவிட்டு, உயிரிழந்த சிறுமியின் குடும்பத்தாருக்கு ரூ. 20 லட்சம் இழப்பீட்டுத் தொகையாக வழங்க வேண்டும் எனவும், காயமடைந்தவர்களின் மருத்துவச் செலவுகளையும் அரசே ஏற்க வேண்டும் எனவும் முதல்வர் திரு. @mkstalin அவர்களை வலியுறுத்துகிறேன். இவ்வாறு ஏழை மக்களின் உயிரை துச்சமென நினைக்கும் அறிவாலயத்தின் ஆணவத்திற்கு வரும் சட்டமன்றத் தேர்தலில் தக்க பாடம் புகட்டப்படும் என தெரிவித்துள்ளார்.

Vignesh

Next Post

என்ன செய்தாலும் முதுகுவலி குறையவில்லையா?. இந்த 4 பழக்கங்கள்தான் காரணம்!. எச்சரிக்கும் நிபுணர்!

Thu Jul 24 , 2025
நவீன வாழ்க்கை முறையில் முதுகுவலி என்பது சாதாரணமானதாகி விட்டது. ஆனால் தவறான தோரணை, உடற்பயிற்சி தவிர்ப்பு, செயலற்ற வாழ்க்கை முறை ஆகியவை இந்த நிலையை வளர்க்கும் முக்கிய காரணிகளாக உள்ளன. எனவே, சரியான முன்னெச்சரிக்கைகள் மற்றும் தினசரி எளிய பயிற்சிகளின் மூலம், முதுகுவலியை தடுக்க முடியும். ஆனால், இன்றைய காலக்கட்டத்தில், முதுகுவலி ஒரு நவீன தொற்றுநோயாகவே மாறி வருகிறது. உலகளவில் மில்லியன் கணக்கான மக்களை பாதித்து வரும். இந்த நிலை, […]
back pain 11zon

You May Like