கடலூர் மாவட்டம் நெல்லிக்குப்பம் அருகேயுள்ள அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் நடந்த சம்பவம் தற்போது பெற்றோர் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
அந்தப் பள்ளியில் எட்டாம் வகுப்பில் படித்து வரும் மாணவர் ஒருவர், வயிறு வலிக்கிறது என கூறி ஓய்வறையில் இருந்த தனது ஆசிரியரான சுபாஷிடம் கூறியுள்ளார். அந்த நேரத்தில் செல்போனில் பேசியுக் கொண்டிருந்த ஆசிரியர் சுபாஷ், மாணவர் மீண்டும் மீண்டும் அழைத்ததால் ஆத்திரமடைந்து வாட்டர் பாட்டிலால் மாணவனை தலையில் கடுமையாக அடித்துள்ளார்.
இதனால் மாணவனின் தலையில் பலத்த காயம் ஏற்பட்டு ரத்தம் வடிந்தது. அங்கிருந்த மற்ற ஆசிரியர்கள் உடனடியாக மாணவனை மீட்டு அருகிலுள்ள மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். மாணவருக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
சம்பவம் குறித்து தகவல் கிடைத்ததும், போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து ஆசிரியர் சுபாஷை கைது செய்து, விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்தச் சம்பவம் பள்ளியில் மாணவர்களின் பாதுகாப்பு மீதான கேள்விகளை எழுப்பியுள்ளது. மேலும், சம்பந்தப்பட்ட பள்ளி நிர்வாகத்தினரிடமும், மாவட்ட கல்வி அதிகாரிகளிடமும் விளக்கம் கோரப்பட்டுள்ளது.
Read more: திமுகவினரின் வருமானத்துக்குப் பொதுமக்கள் உயிர்பலி கொடுக்க வேண்டுமா? அண்ணாமலை அட்டாக்..