முதலிரவில் மனைவி சொன்ன வார்த்தை… மிரண்டுபோன கணவன் செய்த அதிர்ச்சி காரியம்!

child marriage

மனிதனின் வாழ்க்கையில் மிக முக்கியமான திருப்புமுனை திருமணம்தான். ஒரு மனிதனின் வாழ்க்கையை முன்னேற்றப் பாதையில் கொண்டு செல்வதும், சில நேரங்களில் அதையே சீரழிவுக்கு தள்ளுவதும் திருமண வாழ்க்கையாக இருக்கலாம். இன்றைய காலகட்டத்தில் பெற்றோர் பார்த்து நடத்தி வைக்கும் திருமணங்கள் நாளுக்கு நாள் குறைந்து வரும் நிலையில், பலர் தங்களுக்குப் பிடித்த வாழ்க்கைத் துணையை தாங்களே தேர்வு செய்து கொள்கின்றனர். அதே நேரத்தில், சிலர் பெற்றோரின் வற்புறுத்தலால் விருப்பமில்லாத திருமணத்தில் இணைகின்றனர்.


இதுபோன்ற முடிவுகள், அவர்களின் சொந்த வாழ்க்கையை மட்டுமல்லாமல், தங்களை நம்பி திருமணம் செய்து கொண்ட வாழ்க்கைத்துணையின் எதிர்காலத்தையும் பாதித்து விடுகின்றன. இதற்கு உதாரணமாக, தற்போது ஹாப்பூர் மாவட்டத்தில் நடந்துள்ள ஒரு சம்பவம் பெரும் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.

ஹாப்பூர் மாவட்டத்தைச் சேர்ந்த அமித் (பெயர் மாற்றப்பட்டுள்ளது) மற்றும் மீரட்டைச் சேர்ந்த நேஹா (பெயர் மாற்றப்பட்டுள்ளது) ஆகிய இருவருக்கும் கடந்த சில நாட்களுக்கு முன்பு அவர்களின் உறவினர்கள் முன்னிலையில் விமரிசையாக திருமணம் நடைபெற்றது. திருமணத்திற்குப் பிறகு முதலிரவு அறையில் மணமகளுடன் பேசிய மணமகள் கூறியதை கேட்டு மணமகன் பெரும் அதிர்ச்சி அடைந்துள்ளார். ஆம், மணமகள் நேஹா தனக்கு ஏற்கனவே வேறொருவருடன் காதல் இருப்பதாகவும், அவருடன்தான் வாழ விரும்புவதாகவும் அவர் கூறியுள்ளார்.

அது மட்டும் இல்லாமல், தன்னை காதலனுடன் சேர்த்து வைக்காவிட்டால் தற்கொலை செய்து கொண்டு அதன் பழியை மணமகன் மற்றும் அவரது குடும்பத்தினர் மீது சுமத்திவிடுவேன் என்றும் மிரட்டியுள்ளார். இதனால் அதிர்ச்சியடைந்த மணமகன், எந்தவித அசம்பாவிதமும் நடைபெறக்கூடாது என்ற எண்ணத்தில் அடுத்தகட்ட முடிவை எடுத்துள்ளார். ஆம், மணமகன் இரவோடு இரவாக மணமகளின் காதலனை தொடர்புகொண்டு தனது வீட்டிற்க்கு வரவழைத்துள்ளார்.

மேலும், தனது மனைவியை அவருடன் அனுப்பிவைத்துள்ளார். பாலிவுட்டின் ‘ஹம் தில் தே சுகே சனம்’ திரைப்படத்தை நினைவூட்டும் வகையில் நடந்ததாக கூறப்படும் இந்த நிகழ்வு, அப்பகுதியில் பரபரப்பையும் சமூக வலைத்தளங்களில் தீவிர விவாதத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

Also Read: “உள்ள வாங்க… நம்ம உல்லாசமா இருப்போம்” பாசமாக அழைத்த பெண்; ஆசையாய் சென்றவருக்கு நேர்ந்த சோகம்.

Saranya

Next Post

சமூக ஊடகங்களில் வைரலாகும் 'Burnt Toast Theory' என்றால் என்ன? Gen Z தலைமுறையின் வாழ்க்கைப் பார்வையை மாற்றும் வைரல் மனநிலை!

Sun Jul 5 , 2026
சமூக ஊடகங்களில் பல்வேறு டிரெண்ட்கள் வேகமாக உருவாகி மறைந்து விடுகின்றன. ஆனால், சில கருத்துகள் மட்டும் மக்களின் உணர்வுகளுடன் ஆழமாக இணைந்து நீண்ட காலம் பேசப்படுகின்றன. தற்போது இணையத்தில் அதிக கவனம் பெற்று வரும் அத்தகைய ஒரு கருத்துதான் Burnt Toast Theory. Instagram, TikTok போன்ற சமூக ஊடகங்களில் குறிப்பாக Gen Z தலைமுறையினரிடையே இந்தக் கருத்து மிகவும் பிரபலமாகி வருகிறது. வாழ்க்கையில் ஏற்படும் ஏமாற்றங்கள் மற்றும் எதிர்பாராத […]
images 9

You May Like