வங்கக் கடலில் உருவானது குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி..!! இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு..!!

வங்கக் கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகி இருப்பதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

வடமேற்கு வங்கக்கடல் மற்றும் அதனையொட்டிய ஒடிசா, மேற்கு வங்க கடற்கரை பகுதியில் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவி வருகிறது. இதன் காரணமாக குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாகி இருப்பதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதன் காரணமாக ஒடிசா மாநிலத்தின் பல்வேறு மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இதற்கிடையே, மேற்கு திசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக இன்று தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதேபோல் 26.06.2023 முதல் 28.06.2023 வரை தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

Chella

Next Post

அதிர்ச்சி..!! யூடியூபர்களின் வீடுகளில் வருமான வரித்துறை அதிகாரிகள் திடீர் சோதனை..!! என்ன காரணம்..?

Sun Jun 25 , 2023
கேரளாவில் யூடியூப் சேனல் நடத்தி அதிக வருமானம் ஈட்டியவர்கள் அதற்கு உரிய வரியை செலுத்தவில்லை என வருமானவரித்துறை கவனத்துக்குச் சென்றுள்ளது. இதையடுத்து, கேரளாவில் யூடியூபர்களின் வீடுகளில் வருமான வரித்துறையினர் கடந்த சில நாட்களாக அதிரடி சோதனை நடத்தியுள்ளனர். நடிகையும், தொகுப்பாளினியுமான பேளிமாணி, ஷெபின், அர்ஜ்யூ, கால்மீ ஷஸ்ஸாம், ஜெயராஜ் ஜி நாத், அகில் என்.ஆர்.டி, எம்4 டெக், அன்பாக்ஸிங் நியூஸ், ரைஸிங் ஸ்டார், ஈகிள் கேமிங், காஸ்ட்ரோ கேமிங் உள்ளிட்ட […]

You May Like