Alert: மத்திய வங்கக் கடல் பகுதியில் இன்று உருவாகும் காற்றழுத்த தாழ்வு பகுதி…! 27-ம் தேதி வரை கனமழை எச்சரிக்கை…!

rain 1

தமிழகத்தில் இன்று முதல் 27-ம் தேதி வரை 3 நாட்களுக்கு கோவை மற்றும் நீலகிரி மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.


இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட செய்திக்குறிப்பில்: மேற்கு வங்கம் மற்றும் அதனை ஒட்டிய வடக்கு ஒடிசா – வடமேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவிய காற்றழுத்த தாழ்வு பகுதி வலு குறையக்கூடும். இன்று, மத்திய வங்கக் கடல் பகுதியில் ஒரு காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகக்கூடும். இது, காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்று, தெற்கு ஒடிசா – வடக்கு ஆந்திர கடலோரப் பகுதிகளில் செப்.27-ம் தேதி கரையை கடக்கக்கூடும்.

தமிழகம் நோக்கி வீசும் மேற்கு திசை காற்றில் வேகமாறுபாடு நிலவுகிறது. இதன் காரணமாக, இன்று முதல் செப்.30-ம் தேதி வரை தமிழகத்தில் ஓரிரு இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். இன்று முதல் செப்.27 தேதி வரை கோவை மாவட்டத்தின் மலைப்பகுதிகள் மற்றும் நீலகிரி மாவட்டத்தில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. 26-ம் தேதி தென்காசியிலும் கனமழை பெய்யக்கூடும்.

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இன்று வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளது. தமிழக கடலோரப் பகுதிகள், மன்னார் வளைகுடா மற்றும் அதனை ஒட்டிய குமரிக்கடல் பகுதிகளில் இன்று முதல் 28-ம் தேதி வரை சூறாவளிக்காற்று மணிக்கு 40 முதல் 50 கி.மீ வேகத்திலும் இடையிடையே 60 கிமீ வேகத்திலும் வீசக்கூடும் என்பதால் மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

Vignesh

Next Post

கோர தாண்டவம் ஆடிய ரகசா புயல்!. சீனாவில் கரையை கடந்தது!. 2 மில்லியனுக்கும் அதிகமான மக்கள் வெளியேற்றம்!

Thu Sep 25 , 2025
தைவானின் பிரபலமான சுற்றுலா மையமான கிழக்கு மாகாணமான ஹுவாலியனில் ரகசா சூறாவளி தாக்கி 17 பேர் உயிரிழந்துள்ளனர். தைவானில் ரகசா சூறாவளியால் 70 செ.மீ. அளவுக்கு மழைப்பொழிவு ஏற்பட்டு உள்ளது. இந்நிலையில், தொடர் கடும் மழையால் மலை பகுதியில் அமைந்த நீர்நிலை ஒன்று உடைந்தது. பாலம் ஒன்றும் சேதமடைந்தது. இதனால் ஏரியில் இருந்து 60 மில்லியன் டன் அளவிலான நீர் வெளியேற்றப்பட்டது. ஒலிம்பிக் நீச்சல் குளம் போன்று 36 ஆயிரம் […]
Super Typhoon Ragasa

You May Like