10 மாவட்டங்களுக்கு இன்று ஆரஞ்ச் அலர்ட்! இடி மின்னலுடன் வெளுத்து வாங்கப்போகும் அதி கனமழை! லிஸ்டில் எந்தெந்த மாவட்டங்கள்?

Rain 2026

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில், சென்னை மற்றும் அதன் புறநகர்ப் பகுதிகளில் இன்று ஓரிரு இடங்களில் மிக கனமழை பதிவாக வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.


சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, கடலூர், விழுப்புரம், தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, ராமநாதபுரம் ஆகிய 10 மாவட்டங்களில் இன்று இடி மின்னலுடன் கூடிய மிக கனமழை வெளுத்து வாங்கக்கூடும் என வானிலை மையம் எச்சரித்துள்ளது.

இதேபோல், காஞ்சிபுரம், ராணிப்பேட்டை, கள்ளக்குறிச்சி, திருச்சி, அரியலூர் மற்றும் புதுக்கோட்டை உள்ளிட்ட 12 மாவட்டங்களின் ஒருசில பகுதிகளில் இன்று கனமழை பெய்யக்கூடும். நாளை (அக். 21) மழை நீடிக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ள நிலையில், டெல்டா மாவட்டங்களான தஞ்சை, திருவாரூர், நாகை, மயிலாடுதுறை மற்றும் தென் மாவட்டங்களான சிவகங்கை, ராமநாதபுரம் ஆகிய 6 மாவட்டங்களில் கனமழைக்கான வாய்ப்பு நிலவுகிறது.

அக்டோபர் 22ஆம் தேதியன்று தென் மாவட்டங்களை நோக்கி மழைப்பொழிவு தீவிரமடையும் என எச்சரிக்கப்பட்டுள்ளது. அன்றைய தினம் திருநெல்வேலி, கன்னியாகுமரி, தூத்துக்குடி, தென்காசி, விருதுநகர் மற்றும் ராமநாதபுரம் ஆகிய 6 தென் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் மிக கனமழை பெய்வதற்கான சாத்தியக்கூறுகள் இருப்பதால், அப்பகுதிகளுக்கு ‘ஆரஞ்ச் அலர்ட்’ விடுக்கப்பட்டுள்ளது.

Read More : இன்று முதல் வடகிழக்கு பருவமழை தீவிரமடையும்! சென்னைக்கு ஆபத்தா? வானிலை ஆய்வாளர் பிரதீப் ஜான் சொன்ன முக்கிய தகவல்!

Next Post

மூளையில் ரத்த கசிவு.. வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன் மரணம்? தங்கை வசம் சென்ற அதிகாரம்? உலக நாடுகளை உலுக்கிய சம்பவம்!

Tue Oct 20 , 2026
வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன் தீவிர மூளை ரத்தப்போக்கு காரணமாக கோமாவுக்கு சென்று விட்டதாகவும் சீனாவில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சையில் இருப்பதாகவும் நேற்று இரவு முதல் தகவல் பரவியது. சிலர் அவர் இறந்து விட்டதாகவும் கூறினர். இது சர்வதேச அளவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதுகுறித்து சீன ஜனநாயக கட்சியின் தலைவர் வான்ஜுன் ஸியே வெளியிட்டுள்ள பதிவில், கிம் ஜாங் உன் தீவிர மூளை ரத்தப்போக்கு ஏற்பட்டு இறந்து […]
Kim Jong Un 2026

You May Like