Alert: வங்கக்கடலில் இன்று உருவாகும் புதிய காற்றழுத்த தாழ்வுப் பகுதி.‌‌..! 6 மாவட்ட மக்களுக்கு எச்சரிக்கை…!

rain 1

வங்கக்கடலில் இன்று புதிய காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாக வாய்ப்புள்ளது. இதன் காரணமாக தமிழகத்தில் ஈரோடு, வேலூர் உள்ளிட்ட 6 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.


தமிழக கடலோரப் பகுதிகளுக்கு அப்பால் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி, காற்றழுத்த தாழ்வுப் பகுதியாக வலு குறைந்து, தெற்கு கர்நாடகத்தின் உள்பகுதி மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் நிலவுகிறது. இது இன்று அரபிக்கடலில் நிலவக்கூடும். அரபிக்கடல் பகுதிகளில் நிலவிய காற்றழுத்த தாழ்வு மண்டலம், நாளை வட மேற்கு திசையில் மத்திய கிழக்கு அரபிக்கடல் பகுதிகளை நோக்கி நகரக்கூடும். தெற்கு அந்தமான் கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சியின் தாக்கத்தால், இன்று தென்கிழக்கு மற்றும் அதனை ஒட்டிய மத்திய கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் ஒரு புதிய காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாகக்கூடும். இது, இன்று வடமேற்கு திசையில் நகர்ந்து மேலும் வலுவடையக்கூடும்.

இன்று கோவை மாவட்ட மலைப் பகுதிகள், நீலகிரி, ஈரோடு, திருப்பத்தூர், வேலூர், ராணிப்பேட்டை மாவட்டங்களிலும், நாளை திருவள்ளூர், சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், ராணிப்பேட்டை, விழுப்புரம் மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரியில் ஓரிரு இடங்களிலும் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது. சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இன்று வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் சில பகுதிகளில் இடி, மின்னலுடன் லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளது.

Vignesh

Next Post

ஸ்மிருதி மந்தனா, பிரதிகா அதிரடி!. அரையிறுதிக்குள் நுழைந்தது இந்திய அணி!. 53 ரன்கள் வித்தியாசத்தில் நியூசி., தோல்வி!.

Fri Oct 24 , 2025
ஐசிசி மகளிர் ஒருநாள் உலகக் கோப்பை போட்டியின் நேற்றைய போட்டியில் 53 ரன்கள் வித்தியாசத்தில் நியூசிலாந்து அணியை வீழ்த்தியதன் மூலம் இந்திய அணி அரையிறுதிக்கு தகுதி பெற்றுள்ளது. நவி மும்பையில் நடைபெற்ற நேற்றைய ஆட்டத்தில் முதலில் டாஸ் வென்ற நியூசிலாந்து மகளிர் அணி, பந்துவீச்சை தேர்வு செய்தது. இதனைதொடர்ந்து களமிறங்கிய இந்திய மகளிர் அணி, அபாரமாக விளையாடி ரன்களை சேர்த்தது. முதல் விக்கெட்டுக்கு பிரதிகா ராவல் மற்றும் ஸ்மிருதி மந்தானா […]
india vs new zealand womens 1

You May Like