“எதையும் முயற்சி செய்கிறோம்… ஆனாலும் வாழ்க்கை மட்டும் சரியாக போகவில்லை” என்று பலரும் மனதில் நினைக்கும் தருணங்கள் இருக்கும். சிலருக்கு திருமணத் தடை, சிலருக்கு தொழில் பிரச்சனை, இன்னொருசிலருக்கு உடல்நல சிக்கல்கள் என வாழ்க்கை பலவித சோதனைகளை கொடுக்கிறது. “இந்த தலையெழுத்தை மாற்ற வழி இல்லையா?” என்ற கேள்வி எழும் போது, பக்தர்கள் தேடி செல்லும் அதிசய ஆன்மிகத் தலமாக திகழ்கிறது திருப்பத்தூர் பிரம்மபுரீஸ்வரர் கோவில்.
தமிழகத்தின் ஆன்மிக வரலாற்றில் மிக அபூர்வமான தலங்களில் ஒன்றாக கருதப்படும் இந்த கோயிலின் மிகப்பெரிய சிறப்பு, பிரம்மாவிற்கே தனி சன்னதி அமைந்து வழிபாடு நடைபெறுவது தான். பொதுவாக இந்து கோயில்களில் பிரம்மா சிறிய உருவமாக மட்டுமே காணப்படுவார். ஆனால் இங்கு, சிவன் மற்றும் பிரம்மா இருவருக்கும் சமமான முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது. இந்திய அளவிலும் இது மிகவும் அரிதான அமைப்பாக பார்க்கப்படுகிறது.
புராணங்களின் படி, படைப்புத் தொழிலை பெற்ற பிறகு பிரம்மாவுக்கு ஆணவம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதனால் சிவபெருமான் கோபமடைந்து, பிரம்மாவின் ஐந்து தலைகளில் ஒன்றை அகற்றி, பூமியில் பிறந்து தவம் செய்யும் சாபம் அளித்ததாக நம்பப்படுகிறது.
பின்னர் தன் தவறை உணர்ந்த பிரம்மா, சிவனை வேண்டி மன்னிப்பு கேட்டபோது, பூமியில் சிவலிங்கங்களை பிரதிஷ்டை செய்து வழிபட வேண்டும் என்று சிவன் அருளியதாக கூறப்படுகிறது. அதன் பேரில், திருப்பட்டூரில் 108 சிவலிங்கங்களை பிரதிஷ்டை செய்து பிரம்மா கடும் தவம் இருந்ததாகவும், இறுதியில் சிவன் காட்சி தந்து சாபவிமோசனம் அளித்ததாகவும் ஸ்தல புராணம் கூறுகிறது.
அதன் பின்னர், இந்த தலத்தில் பிரம்மா பக்தர்களின் “தலையெழுத்தை மாற்றும் அருள் வடிவாக” இருப்பதாக பக்தர்கள் நம்புகின்றனர். அதனால் தான், “யாருடைய வாழ்க்கையில் மாற்றம் வர வேண்டுமோ அவர்களையே இந்த கோயில் அழைக்கும்” என்ற நம்பிக்கையும் இப்பகுதியில் நிலவுகிறது.
கோயிலின் அபூர்வ அமைப்பு: திருப்பத்தூர் பிரம்மபுரீஸ்வரர் கோயிலின் கட்டிட அமைப்பும் பக்தர்களை ஆச்சரியப்படுத்தும் வகையில் உள்ளது. ஏழு நிலைகளைக் கொண்ட ராஜகோபுரம் சூரிய பகவானின் தேரை குறிக்கும் வகையில் அமைந்துள்ளது.
முதலில் பிரம்மா சன்னதி, பின்னர் விஷ்ணு சன்னதி, அதன் பின் சிவன் மூலவர் தரிசனம் நடைபெறுவது மிகவும் அபூர்வமான அமைப்பாக கருதப்படுகிறது.
நரசிம்மரின் நான்கு அவதார வடிவங்கள் செதுக்கப்பட்ட தூண்கள் கோயிலின் சிற்பக்கலையை வெளிப்படுத்துகின்றன. தெற்கு நோக்கிய காலபைரவர் சன்னதி, வள்ளி-தெய்வானையுடன் சண்முகநாதர் சன்னதி ஆகியவை பக்தர்களின் கவனத்தை ஈர்க்கின்றன.
Read more: தவெக அமைச்சரவையில் இடம் பெறும் விசிக MLA.. தமிழக அரசியலில் அடுத்தடுத்த ட்விஸ்ட்..!



