“அடக் கொடுமையே………”செங்கல் வீசி முகத்தை உடைத்த கணவன்! கட்டையால் அடித்த கொழுந்தன் மற்றும் மாமியார்! கொடூரச் சம்பவம்!

நாட்டில் தற்போது பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் தொடர்ந்து அதிகரித்து வருகின்றது . அதிலும் குறிப்பாக குடும்ப வன்முறையின் காரணமாக பெண்கள் அவர்களது கணவன் மற்றும் மாமியாரால் தொடர்ந்து சித்திரவதைக்கு உள்ளாக்கப்படுவதும் பல்வேறு விதமான கொடுமைகளுக்கு ஆளாக்கப்படுவதும் தொடர்ந்து நடைபெற்றுக் கொண்டிருக்கிறது . அந்த வகையில் தற்போது உத்தரபிரதேச மாநிலத்தில் நடைபெற்றிருக்கும் ஒரு சம்பவம் மக்களை அதிர்ச்சியடைய செய்திருக்கிறது. உத்திர பிரதேச மாநிலத்தைச் சார்ந்த பெண் ஒருவர் தனது கணவராலும் மாமியாராலும் பலமாக தாக்கப்பட்டு முகம் சிதைக்கப்பட்டுள்ள சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.


உத்திர பிரதேச மாநிலம் ஃபருகாபாத் பகுதியைச் சார்ந்த இளம்பெண் ஒருவருக்கு திருமணமாகி ஓராண்டுகளான நிலையில் கணவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டையடுத்து அவரது கணவர் அந்தப் பெண்மணியை செங்களால் பயங்கரமாக தாக்கி இருக்கிறார். இதில் அந்தப் பெண்மணியின் முகம் சிதைவடைந்து இருக்கிறது. மேலும் அவரது மாமியாரும் கணவரின் சகோதரரும் கட்டையால் முகத்தில் தாக்கியுள்ளனர். இதனால் பலத்த காயமடைந்துள்ள அந்த பெண்மணி தற்போது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். சம்பவம் தொடர்பாக வழக்கு பதிவு செய்துள்ள காவல்துறையினர் தீவிரமான விசாரணையை மேற்கொண்டு வருகின்றனர்.

1newsnationuser5

Next Post

"இனிமேல் நம்பிக்கையில்லை அம்மா........."! 24 வயது இளைஞன் வேலை நீக்கம் செய்ததால் உருக்கமான கடிதம் எழுதி தூக்கிட்டு தற்கொலை!

Sun Mar 12 , 2023
வேலை நீக்கம் செய்யப்பட்டதால் மனம் உடைந்த 24 வயதில் இளைஞர் ஒருவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சென்னையில் சோகத்தை ஏற்படுத்தி இருக்கிறது. சென்னை டிவிஎஸ் நகரை சேர்ந்தவர் விக்னேஸ்வரன் வயது 24. இவர் தனியார் ஐடி நிறுவனம் ஒன்றில் பணியாற்றி வந்தார். தற்போது ஐடி நிறுவனங்கள் பெரும் பொருளாதார சரிவை சந்தித்து வருவதால் அந்த நிறுவனங்கள் ஆட்குறைப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றன. இதன் காரணமாக விக்னேஸ்வரன் வேலை செய்த […]
IMG 20230312 WA0056

You May Like