நிலமற்ற வேளாண் தொழிலாளர்களுக்கான விபத்து மரண இழப்பீடு ரூ.2 லட்சமாக உயர்த்தி தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
நிலமற்ற வேளாண் தொழிலாளர்களுக்கு விபத்து மரணத்துக்காக வழங்கப்பட்டு வரும் இழப்பீட்டு தொகை ரூ.1 லட்சம் என்பதை ரூ.2 லட்சம் என்றும், உடல் உறுப்பு இழப்பிற்காக வழங்கப்பட்டு வரும் நிதி உதவி ரூ.20 ஆயிரம் என்பதை ரூ.1 லட்சம் என்றும், இயற்கை மரணத்துக்காக வழங்கப்பட்டு வரும் நிதி உதவி ரூ.20 ஆயிரம் என்பதை ரூ.30 ஆயிரம் என்றும், இறுதிச்சடங்குக்காக வழங்கப்பட்டு வரும் நிதி உதவி ரூ.2,500 என்பதை ரூ.10 ஆயிரம் என்றும் உயர்த்தி வழங்க தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
இது குறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள அரசாணையில்: 2025-26ம் ஆண்டு நிதிநிலை அறிக்கையில் வேளாண்மை – உழவர் நலத்துறை அமைச்சர், நிலமற்ற வேளாண் தொழிலாளர்களுக்கு, விபத்து மரணத்துக்கான இழப்பீடு, விபத்தினால் ஏற்படும் உடல் உறுப்பு இழப்பிற்கு நிதி உதவி, இயற்கை மரணத்துக்கான நிதி உதவி, இறுதிச்சடங்கு செய்வதற்கான நிதி உதவி ஆகியவை உயர்த்தி வழங்கப்படும் என அறிவித்தார்
அதன்படி, நிலமற்ற வேளாண் தொழிலாளர்களுக்கு விபத்து மரணத்துக்காக வழங்கப்பட்டு வரும் இழப்பீட்டு தொகை ரூ.1 லட்சம் என்பதை ரூ.2 லட்சம் என்றும், உடல் உறுப்பு இழப்பிற்காக வழங்கப்பட்டு வரும் நிதி உதவி ரூ.20 ஆயிரம் என்பதை ரூ.1 லட்சம் என்றும், இயற்கை மரணத்துக்காக வழங்கப்பட்டு வரும் நிதி உதவி ரூ.20 ஆயிரம் என்பதை ரூ.30 ஆயிரம் என்றும், இறுதிச்சடங்குக்காக வழங்கப்பட்டு வரும் நிதி உதவி ரூ.2,500 என்பதை ரூ.10 ஆயிரம் என்றும் உயர்த்தி வழங்க முதல்வர் உத்தரவிட்டுள்ளார்.