அடையாளத்தை தொலைத்து விடக்கூடாது என்பதற்காக அடைக்கலம் தேடி சென்றுள்ளார் ஓபிஎஸ்….! ஆர்பி உதயகுமார் விளாசல்….!

தமிழக முன்னாள் முதலமைச்சர் பன்னீர்செல்வம், அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் சந்திப்பு தமிழக அரசியல் வட்டாரத்தில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது. பன்னீர்செல்வம் மற்றும் டிடிவி தினகரன் நேற்று கூட்டாக பத்திரிகையாளர்களை சந்தித்தனர்.

அப்போது சென்ற காலங்களை மறந்து விட்டு ஒன்றிணைந்து இருக்கின்றோம். நடந்தவை நடந்தவையாக இருக்கட்டும், இனி நடப்பவை நல்லவையாக இருக்கட்டும். அதிமுகவின் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு அடுத்த கட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று இருவரும் பேட்டி அளித்தனர்.

இத்தகைய நிலையில், பன்னீர்செல்வம் டிடிவி தினகரன் உள்ளிட்டோரின் சந்திப்பு தொடர்பாக பிரபல தொலைக்காட்சி ஒன்றுக்கு பேட்டி அளித்த முன்னாள் அமைச்சர் ஆர்பி உதயகுமார், பன்னீர்செல்வம் தினகரன் சந்திப்பு சந்திரபாபு சந்திப்பு இதன் காரணமாக, தமிழகத்தில் எந்தவித பாதிப்பும் ஏற்படப் போவதில்லை என கூறியுள்ளார்.

மேலும் இதை நாம் பொருட்படுத்த வேண்டிய அவசியம் கிடையாது. 3 முறை முதல்வராக இருந்தவர் தற்போது அடைக்கலம் தேடி தன்னுடைய அடையாளத்தை தொலைத்து விடக்கூடாது என்பதற்காக சென்றுள்ளார் என கூறியிருக்கிறார்.

கட்சியிலிருந்து ஒழுங்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்ட பின்னர் அவர் உச்ச நீதிமன்றம் வரையில் சென்றார். ஆனால் நேற்று கட்சியிலிருந்து நீக்கி இன்று உடனடியாக இன்று சந்திப்பு நடந்துவிடவில்லை சென்ற 10 மாதங்களாக நீதிமன்றம் சென்று அவர் வைத்த வாதங்கள் தோல்வியை சந்தித்த பிறகு தான் தொண்டர்களிடம் தோல்வி, மக்களிடம் நம்பிக்கை இழப்பு இதன் காரணமாகத்தான் யாரை எதிர்த்தாரோ, எந்த குடும்பம் தமிழகத்தில் அதிமுகவில் இருக்கக் கூடாது என்று அவர் தர்ம யுத்தத்தில் குதித்தாரோ அந்த குடும்பத்திடம் சரணடைந்துள்ளார் என்று கூறியிருக்கிறார் ஆர்.பி. உதயக்குமார்.

தன்னுடைய சுயநலத்திற்காக, தன்னுடைய எதிர்காலத்திற்காக, தன்னுடைய பதவிக்காக அவர்களிடம் அடைக்கலம் கேட்டு சென்றுள்ளார். அதிமுக ஒன்றரை கோடி தொண்டர்களால் ஏற்றுக் கொள்ளப்பட்ட தலைவர் எடப்பாடி பழனிச்சாமி என்று உச்ச நீதிமன்றம் வரையில் சென்று உறுதி செய்யப்பட்டது. இதில் எந்த விதமான குழப்பமும் கிடையாது. இதில் தொண்டர்களும் மக்களும் தெளிவாக இருக்கிறார்கள்.

இது மக்களிடையே ஏற்கனவே இன்று மக்களின் அங்கீகாரத்தை பெற இயலாமல் பொதுமக்களிடம் தோல்வி அடைந்த தலைவர்களாக தான் தற்போது இவர்கள் சந்திக்கின்ற நிகழ்வு இருக்கிறது. ஈரோடு தேர்தலில் அனைவரும் நின்றார்கள், பிரதான எதிர்க்கட்சி அதிமுக என நின்று காட்டினார் எடப்பாடி பழனிச்சாமி. இந்த சந்திப்பை ஊடகங்கள் பெரிதாக காட்டிக் கொள்ளலாம். பொதுமக்களிடமும், தொண்டர்களிடமும் இது எந்த விதமான தாக்கத்தையும் உண்டாக்காது என்று கூறியுள்ளார் முன்னாள் அமைச்சர் ஆர் பி உதயகுமார்.

Next Post

வெள்ளரிக்காய் மட்டுமல்ல அதன் தோலிலும் இவ்வளவு நன்மைகள் இருக்கா..? இது தெரிஞ்சா இனி தூக்கிப் போடமாட்டீங்க..!!

Tue May 9 , 2023
கோடையில் வெள்ளரிக்காயை சாலட்டாகவும், சில சமயங்களில் சிற்றுண்டியாகவும் சாப்பிடுவார்கள். வெள்ளரியில் நன்மை பயக்கும் நீர்ச்சத்து நிறைந்துள்ளது. அதேசமயம் வெள்ளரிக்காய் தோல்களும் ஆரோக்கியத்திற்கு சிறந்தது என்று உங்களுக்குத் தெரியுமா? ஆம், வெள்ளரிக்காய் தோலை இனி குப்பையில் போடுவதற்கு பதிலாக இப்படி பல வழிகளில் பயன்படுத்தலாம். வெள்ளரிக்காய் ஆரோக்கியத்திற்கு மிகவும் நல்லது. அதேபோல் அதன் தோலில் பல வகையான வைட்டமின்கள் மற்றும் தாதுக்கள் உள்ளன. இது நமது ஆரோக்கியத்திற்கு பெரிதும் உதவுகிறது. நார்ச்சத்தும் […]

You May Like