சீட்டுக் கட்டாய் சரியும் அதிமுக.. 2000-க்கும் மேற்பட்ட நிர்வாகிகளை கொத்தாக தூக்கிய திமுக..!! செம ஷாக்கில் இபிஎஸ்..

stalin eps

தமிழ்நாட்டில் அடுத்த ஆண்டு சட்டமன்றத் தேர்தல் நடைபெற உள்ள நிலையில் தேர்தல் களம் சூடுபிடித்துள்ளது. அதன்படி, தி.மு.க. தலைமையிலான கூட்டணியில் காங்கிரஸ், விடுதலை சிறுத்தைகள் கட்சி, ம.தி.மு.க., மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட் உள்ளிட்ட கட்சிகள் மீண்டும் கூட்டணியாக இணைந்து சட்டமன்றத் தேர்தலைச் சந்திக்க உள்ளன.


2026 சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு திமுக, அதிமுக உள்ளிட்ட கட்சிகள் மாற்றுக் கட்சியினரை தங்கள் கட்சியில் சேர்க்கும் முயற்சியில் தீவிரமாக களமிறங்கியுள்ளனர். இதற்கிடையில், அதிமுகவில் அங்கீகாரம் மற்றும் மரியாதை கிடைக்காமல் சிரமப்படும் சில முக்கிய தலைவர்கள், எதிர்காலத்தை உறுதிப்படுத்தும் நோக்கில் திமுக பக்கம் நகர்ந்து வருவதாகக் கூறப்படுகிறது.

அதிமுக நிர்வாகிகளை தங்கள் பக்கம் இழுக்கும் நோக்கத்தில், திமுக ‘ஆபரேஷன் அதிமுக’ என்ற பெயரில் ஒரு ரகசியத் திட்டத்தை தொடங்கியுள்ளதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இந்தத் திட்டத்தின் கீழ், மாவட்ட செயலாளர்களிடம் அதிமுக நிர்வாகிகளை தொடர்புகொண்டு, திமுகவிற்கு வரச் செய்வதற்கான பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் கிருஷ்ணகிரி மேற்கு அதிமுக மாவட்ட தகவல் தொழில்நுட்ப பிரிவு தலைவர், ஓசூர் மாநகர கிழக்கு மண்டல குழு தலைவர் புருஷோத்தம ரெட்டி உள்ளிட்டோர் அமைச்சர் சக்கரபாணி முன்னிலையில் திமுகவில் இணைந்தனர். மேலும் வரும் ஞாயிற்றுக்கிழமை இவர்களின் ஆதரவாளர்கள் இரண்டாயிரத்திற்கும் மேற்பட்டோர் திமுகவில் இணைய உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

Read more: ஓபிஎஸ்-க்கு டிமிக்கி..!! மன்னிப்பு கடிதத்துடன் மீண்டும் எடப்பாடி அணியில் இணையும் வைத்திலிங்கம்..!! உண்மை என்ன..?

English Summary

AIADMK will lose the ticket.. DMK has sacked more than 2000 administrators..!! EPS in complete shock..

Next Post

இன்று உலக நீரிழிவு தினம்!. சர்க்கரையை கட்டுப்படுத்தாவிட்டால், உடலில் இந்த 5 பிரச்சனைகள் ஏற்படும்!. வாழ்க்கையே பாழாகிவிடும்!.

Fri Nov 14 , 2025
சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்தாவிட்டால், அது இதயம், சிறுநீரகங்கள், கண்கள் மற்றும் நரம்புகளில் பாதகமான விளைவுகளை ஏற்படுத்தும். 2025 உலக நீரிழிவு தினத்தன்று, கட்டுப்பாடற்ற இரத்த சர்க்கரையால் ஏற்படும் ஐந்து கடுமையான சிக்கல்களைப் பற்றி அறிந்து கொள்ளுங்கள். நீரிழிவு நோய் இப்போதெல்லாம் மிகவும் பொதுவானதாகிவிட்டது. சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்தாமல் விட்டால், இந்த நோய் அமைதியாக முழு உடலையும் பலவீனப்படுத்துகிறது. உலக சுகாதார அமைப்பின் (WHO) அறிக்கையின்படி, கட்டுப்பாடற்ற நீரிழிவு நரம்புகள் மற்றும் […]
World Diabetes Day

You May Like