அலர்ட்..! அடுத்த 48 மணி நேரத்தில் காத்திருக்கும் சம்பவம்…! மீனவர்கள் கடலுக்கு போக வேண்டாம்…!

cyclone rain

வங்கக் கடலில் 22-ம் தேதி வாக்கில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகும் நிலையில், தமிழகத்தில் நாளை முதல் 23-ம் தேதி வரை கனமழை நீடிக்க வாய்ப்புள்ளது என வானிலை மையம் தெரிவித்துள்ளது.


தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய இலங்கை கடலோர பகுதிகளில் காற்றழுத்த தாழ்வு பகுதி நிலவுகிறது. இது இன்று மேற்கு அல்லது வடமேற்கு திசையில் மெதுவாக நகரக்கூடும். மேலும் 22-ம் தேதி வாக்கில் தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் ஒரு காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகக்கூடும். இது, அடுத்த 48 மணி நேரத்தில் மேற்கு அல்லது வடமேற்கு திசையில் நகர்ந்து மேலும் வலுப்பெறக்கூடும்.

இதன் காரணமாக தமிழகத்தில் இன்று பெரும்பாலான இடங்களிலும், நாளை முதல் 23-ம் தேதி வரை ஒருசில இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். தமிழகத்தில் இன்று கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி, ராமநாதபுரம், சிவகங்கை, விருதுநகர், தென்காசி மற்றும் தேனி மாவட்டங்களிலும் 19, 20 தேதிகளில் மயிலாடுதுறை மற்றும் கடலூர் மாவட்டங்களிலும், 21-ம் தேதி மயிலாடுதுறை, கடலூர், விழுப்புரம், செங்கல்பட்டு, நாகப்பட்டினம் மாவட்டங்களிலும் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.

22-ம் தேதி திருவள்ளூர், காஞ்சிபுரம், சென்னை, செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், திருவாரூர், தஞ்சாவூர், புதுக்கோட்டை, ராமநாதபுரம், தூத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாகுமரி மாவட்டங்களிலும், 23-ம் தேதி மேற்கூறிய மாவட்டங்கள் மற்றும் சிவகங்கை, அரியலூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும் கனமழை பெய்யக்கூடும்.

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் நாளை வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய லேசான அல்லது மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. தென் தமிழக கடலோரப் பகுதிகள், மன்னார் வளைகுடா மற்றும் குமரிக்கடல் பகுதிகளில் நாளை சூறாவளிக்காற்று மணிக்கு 35 முதல் 45 கிமீ வேகத்திலும் இடையிடையே 55 கிமீ வேகத்திலும் வீசக்கூடும் என்பதால் மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

Vignesh

Next Post

டிரம்பின் காசா திட்டம் குறித்த அமெரிக்க தீர்மானத்தை ஏற்றது ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில்!. ஹமாஸ் நிபந்தனைகள் நிராகரிப்பு!.  20 அம்சத் திட்டம் என்ன தெரியுமா?

Tue Nov 18 , 2025
அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பின் காசா அமைதித் திட்டத்திற்கு ஐ.நா. ஒப்புதல் அளித்துள்ளது. இந்த ஐ.நா. தீர்மானம், காசா போரை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான ஜனாதிபதி டொனால்ட் டிரம்பின் திட்டத்தை ஆதரிப்பதோடு, பாலஸ்தீனப் பிரதேசத்தில் சர்வதேச உறுதிப்படுத்தல் படையை அனுப்பவும் அங்கீகாரம் அளிக்கிறது. இருப்பினும், இந்த ஐ.நா. நடவடிக்கையை ஹமாஸ் எதிர்க்கிறது. காசா அமைதித் திட்ட முன்மொழிவை ஹமாஸ் நிராகரித்து, பாலஸ்தீனியர்களின் உரிமைகள் மற்றும் கோரிக்கைகளை பூர்த்தி செய்யவில்லை என்றும், காசா மீது […]
UN Security Council trump gaza plan

You May Like