கர்நாடகாவின் துமகுரு மாவட்டம், பெல்லாவி கிராமத்தில் இடம்பெற்ற கொடூரக் கொலை சம்பவம் நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 42 வயதான லட்சுமி தேவி என்பவர், தனது சொந்த மருமகனாலேயே கொலை செய்யப்பட்டு, உடல் பல துண்டுகளாக வெட்டி 19 பைகளில் அடைத்து, வெவ்வேறு இடங்களில் தூக்கி வீசப்பட்டிருப்பது விசாரணையில் வெளிச்சத்துக்கு வந்துள்ளது.
ஆகஸ்ட் 4 அன்று, மகளை பார்க்க வீட்டை விட்டு சென்ற லட்சுமி தேவி வீடு திரும்பவில்லை. இதையடுத்து, அவரது கணவர் பசவராஜ் பெல்லாவி காவல் நிலையத்தில் புகார் அளித்தார். ஆகஸ்ட் 7 அன்று சிம்புகனஹள்ளி பகுதியில் சந்தேகத்திற்கிடமான பைகள் கிடப்பதாக பல பொதுமக்கள் போலீசுக்கு தகவல் தெரிவித்தனர். மொத்தம் 19 பைகள், 19 இடங்களில் தூக்கி வீசப்பட்டிருந்தன. அவற்றை ஆய்வு செய்ததில், அனைத்திலும் மனித உடல் பாகங்கள் இருப்பது கண்டறியப்பட்டது.
ஆனாலும் தலை மட்டும் கிடைக்கவில்லை. இதையடுத்து போலீசார் மீட்கப்பட்ட உடல் உறுப்புகளை தடயவியல் பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மருத்துவ ஆய்வுக்குப் பின் அது ஒரு பெண்ணின் உடல் பாகங்கள் என்பது தெரியவந்தது. இதைதொடர்ந்து போலீசார் துமகூரு மாவட்டத்தில் மாயமான பெண்கள் குறித்த பட்டியலை தயாரித்தனர். அதில் கடந்த 3-ந்தேதி துமகூரு புறநகர் பெல்லாவியை சேர்ந்த 42 வயதான லட்சுமி தேவி என்ற பெண் காணாமல் போனது தெரியவந்தது.
இதுகுறித்து எஸ்பி கே.வி. அசோக் தெரிவித்ததாவது: “CCTV கேமராவில் மாருதி சுசுகி Breeza கார் ஒன்று சிக்கியது. அந்த காரில்தான் உடற்பாகங்கள் வீசப்பட்டிருந்தது. விசாரணையில், அந்த கார் சதீஷ் (38) என்பவரின் பெயரில் பதிவு செய்யப்பட்டிருந்தது. அவரை கைது செய்து விசாரிக்கையில், பல் மருத்துவர் ராமச்சந்திரய்யா (47) மற்றும் கிரண் (32) ஆகியோரும் இதில் தொடர்புடையவர்கள் என தெரியவந்தது,” என்றார்.
போலீசார் அளித்த தகவலின்படி, ராமச்சந்திரய்யா, லட்சுமி தேவியின் மகள் தேஜஸ்வியை 2019-ல் திருமணம் செய்து கொண்டார். திருமணத்திற்குப் பிறகு, மாமியார் அடிக்கடி குடும்ப விஷயங்களில் தலையிட்டு பிரச்சனை கிளப்பு வந்ததாக கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த ராமச்சந்திரய்யா மாமியை 19 துண்டுகளாக வெட்டி கொலை செய்துள்ளார். இந்த வழக்கு தற்போது தீவிர விசாரணையில் உள்ளது. துமகுரு மாவட்ட மக்களிடையே இந்த சம்பவம் பெரும் பரபரப்பையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.
Read more: சங்கிலியை இழுத்தால் ரயில் எப்படி நிற்கும்..? பலருக்கு தெரியாத அறிவியல் காரணம் இதுதான்..!!