பிறந்தநாளை முன்னிட்டு ஓமந்தூரில் அடிக்கப்பட்டுள்ள பேனரில் முன்னாள் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலையின் படம் இடம்பெறவில்லை.
தமிழக பாஜகவினர் பிரதமர் மோடி பிறந்த நாளை சேவை இருவார நிகழ்ச்சியாக கொண்டாடி வருகின்றனர். அதன்படி, மருத்துவ முகாம்கள் நடத்துவது, நலத்திட்ட உதவிகள் வழங்குவது, படகு போட்டிகள் நடத்துவது உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகளை ஏற்பாடு செய்து நடத்தி வருகின்றனர். இந்நிலையில், மோடியின் பிறந்தநாளை முன்னிட்டு, தமிழகம் முழுவதும் திரையரங்குகளில் பிரதமர் மோடியின் சாதனைகள், தியாகங்கள் குறித்த ஒரு மணி நேர குறும்படத்தை திரையிட பாஜகவினர் ஏற்பாடு செய்துள்ளனர். இதற்காக, குறிப்பிட்ட திரையரங்குகளை செப்.17-ம் தேதி முதல் 24-ம் தேதி வரை முன்பதிவு செய்து பிரதமர் மோடி குறித்த படங்களை காட்சிப்படுத்தினார்.
இந்த நிலையில் இந்திய பிரதமர் நரேந்திர மோடியின் 75வது பிறந்தநாளை முன்னிட்டு ஓமந்தூரில் இன்று 1008 கோ பூஜையும், 75 ஏழை எளிய மகளிருக்கு பசு வழங்கும் விழா விழுப்புரம் பாஜகவினரால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளளது. இதில் பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் கலந்துக்கொள்ள உள்ளார். இதற்காக அடிக்கப்பட்டுள்ள பேனரில் முன்னாள் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலையின் படம் இடம்பெறவில்லை. இது மிகப்பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
பாஜகவில் அண்ணாமலை ஓரம் கட்டப்படுவதாக கூறப்பட்டு வரும் நிலையில், பிரதமர் நரேந்திர மோடியின் பிறந்தநாள் விழாவிற்காக அடிக்கப்பட்ட பேனர்களில் அண்ணாமலை படங்களை பதிவு செய்யாமல் தவிர்த்த சம்பவம் கட்சியின் மாற்ற நிர்வாகிகள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.