தமிழக அரசியலில் இருந்து எக்ஸிட் ஆகும் அண்ணாமலை..? பாஜக தலைமை எடுக்கும் அதிரடி முடிவு..!

Annamalai K BJP

தமிழக பாஜக தலைவராக பொறுப்பு வகித்த அண்ணாமலை கடந்த சில மாதங்களுக்கு முன்பு அந்த பதவியில் இருந்து விலகினார். இதை அடுத்து தமிழக பாஜக மாநில தலைவராக நெல்லை மாவட்டத்தைச் சேர்ந்த நயினார் நாகேந்திரன் தேர்வு செய்யப்பட்டார். அவர் ஒருமனதாக தேர்வானார். மாநிலத் தலைவர் பதவியை ராஜினாமா செய்த ஒரு நாளுக்குப் பிறகு அண்ணாமலை கட்சியின் தேசிய கவுன்சில் உறுப்பினராக நியமிக்கப்பட்டார்.


மேலும் அவர் மத்திய இணை அமைச்சர் ஆகலாம் என்றும் பாஜக வட்டாரத்தில் பேசப்பட்டது. இதையொட்டி அவர் ஆந்திராவில் இருந்து மாநிலங்களவை உறுப்பினராக தேர்வு செய்யப்பட இருப்பதாகவும் கூறப்பட்டது. இருப்பினும் இந்த தகவல் அனைத்தும் வெறும் வதந்தி என்பது நாளடைவில் தெரிய வந்தது.

2024 தேர்தலில் பாஜக கூட்டணி இல்லாமலே போட்டியிட்டு, தமிழகத்தில் 3% வாக்குகளை 11% ஆக உயர்த்தியது, அண்ணாமலையின் கடின உழைப்பால் தான் என்று கட்சி நெருக்கமானோர் பாராட்டுகிறார்கள். மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா பல சந்தர்ப்பங்களில், “அண்ணாமலை, மாநில அரசியலில் மட்டும் அல்ல, தேசிய அரசியலிலும் முக்கிய பங்கு வகிப்பார்” என பாராட்டி இருந்தார்.

தற்போது அண்ணாமலை எந்த ஊடகங்களுக்கும் பேட்டி தரவில்லை. பாஜக சார்ந்த கூட்டங்களில் மட்டும் பங்கேற்று வருகிறார். கள அரசியலில் இருந்து ஒதுங்கி இருப்பது போல அண்ணாமலை காட்டிக் கொண்டாலும் தன்னுடைய ஆதரவாளர்கள் மூலமாக தமிழக பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரனுக்கு அவர் குடைச்சல் கொடுப்பதாக கூறப்பட்டு வருகிறது.

இதனை அறிந்த பாஜக தலைமை தமிழகத்தில் கூட்டணிக்கு சேதாரம் வரக்கூடாது என்பதற்காக மேற்கு வங்க தேர்தல் பொறுப்பாளராக அவரை நியமிக்க முடிவு எடுத்துள்ளதாக கூறப்படுகிறது. அம்மாநிலத்தில் அடுத்த ஆண்டு சட்டமன்றத் தேர்தல் நடக்க உள்ளது குறிப்பிடத்தக்கது.

Read more: ஒரு முறை சார்ஜ் செய்தால் 500 கி.மீ போகலாம்..! ரூ.2 லட்சம் வரை தள்ளுபடி! புதிய கார் வாங்க சரியான நேரம்!

English Summary

Annamalai to exit Tamil Nadu politics? BJP leadership’s drastic decision!

Next Post

செம..! உலகில் இதுவே முதன்முறை.. மனித தோலை ஆய்வகத்தில் வளர்த்த விஞ்ஞானிகள்.. அசத்தல் கண்டுபிடிப்பு!

Thu Aug 21 , 2025
ஆஸ்திரேலிய விஞ்ஞானிகள் குழு, உலகின் முதல் மனித தோலை செயற்கையாக ஆய்வகத்தில் உருவாக்கி உள்ளனர்.. முழுக்க முழுக்க ஆய்வகத்தில் செயற்கை முறையில் தோல் உருவாக்கப்படுவது இதுவே முதன்முறை.. விஞ்ஞானிகளால் உருவாக்கப்பட்ட இந்த தோல், ரத்த விநியோகத்துடன் வளர்த்துள்ளது. இந்த கண்டுபிடிப்பு மருத்துவத்துறையில் முக்கிய மைல்கல்லாக பார்க்கப்படுகிறது..இந்த முன்னேற்றம் தோல் நோய்கள், தீக்காயங்கள் மற்றும் ஒட்டுக்களுக்கு சிறந்த சிகிச்சைக்கு உதவும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.. குயின்ஸ்லாந்து பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த விஞ்ஞானிகள் குழு, ரத்த […]
world first skin

You May Like